×

கணவரை மீட்டெடுக்காமல் விடமாட்டேன் - பீட்டரின் முன்னாள் மனைவி பேட்டி!

வனிதாவின் திருமண விவகாரம் சூடுபிடித்துள்ளது. விவாகரத்து பெறாமல் மறுமணம் செய்துகொண்ட பீட்டரின் முன்னாள் மனைவி எலிசபெத் ஹெலன், "தன் கணவர் பீட்டர் விவாகரத்து கொடுக்காமல் மறுமணம் செய்ய மாட்டேன் என்று உறுதி அளித்திருந்தார். ஆனால்,  விவாகரத்து ஆவதற்கு முன்பே அவர் வனிதாவை திருமணம் செய்துகொண்டது தனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

 

மேலும், பீட்டரிடம் வனிதாவுடன் திருமணமா என்று தான் கேட்டதற்கு,  அது திருமணம் இல்லை வெறும் படப்பிடிப்பு என கூறி என்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டுள்ளார். எனவே என் குழந்தைக்கு தகப்பன் வேண்டும்.  தன்னுடைய கணவர் என்னதான் தவறு செய்திருந்தாலும் அவர் என்னுடைய கணவர் தான் என்றும் அவரை விட்டுக் கொடுக்க முடியாது.

 வனிதா எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தனக்கு கவலை இல்லை, தன்னுடைய கணவரை மீட்டு எடுக்காமல் விடமாட்டேன் என்று பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் பிரபல தனியார் சேனல் ஒன்றிற்கு பரபரப்பு பேட்டி கொடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News