Categories: Cinema News latest news throwback stories

“பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா”… இந்த கிளாசிக் காமெடி எப்படி உருவாச்சி தெரியுமா?? கேட்டா அசந்திடுவீங்க..

கவுண்டமணி-செந்தில் காம்போ மிகப்பெரிய வெற்றி காம்போவாக திகழ்ந்த ஒன்று என்பதை சினிமா ரசிகர்கள் ஒப்புக்கொண்டே ஆவார்கள். கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கவுண்டமணி-செந்தில் ஆகியோர் இணைந்து நகைச்சுவையில் பின்னி பெடலெடுத்திருக்கிறார்கள்.

Goundamani-Senthil

இவர்கள் சேர்ந்து நடித்த பல காமெடி வசனங்கள் இப்போதும் மிகப் பிரபலமாக பேசப்பட்டு வருபவை. அதில் குறிப்பாக “பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா” என்ற வசனம் இன்றும் இணையத்தில் மீம் டெம்ப்ளேட்டாக வலம் வந்துகொண்டிருக்கிறது.

Vaidehi Kathirunthal

“பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா” என்ற காமெடி காட்சி இடம்பெற்ற திரைப்படம் “வைதேகி காத்திருந்தாள்”. இத்திரைப்படத்தில் விஜயகாந்த் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரேவதி நடித்திருந்தார். இத்திரைப்படத்தை சுந்தர்ராஜன் இயக்கியிருந்தார். இந்த நிலையில் “பெட்ரோமாகஸ் லைட்டேதான் வேணுமா” என்ற காமெடி காட்சி உருவான சுவாரஸ்ய கதையை குறித்து இப்போது பார்க்கலாம்.

Vijayakanth

“வைதேகி காத்திருந்தாள்” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு நாள் விஜயகாந்த் வெகு நேரமாகியும் படப்பிடிப்பிற்கு வரவில்லையாம். அப்போது இயக்குனர் சுந்தர்ராஜன் “விஜயகாந்த் ஏன் இன்னும் வரவில்லை” என உதவி இயக்குனரிடம் கேட்டபோது, அந்த உதவி இயக்குனர் “அவர் இன்று இரண்டு மணி நேரம் தாமதமாக வருவார் என உங்களிடம் சொல்லிவிட்டுத்தானே சென்றார்” என்றாராம்.

R. Sundarrajan

அதன் பிறகுதான் சுந்தர்ராஜனுக்கு விஜயகாந்த் தாமதமாக வருவதாக தன்னிடம் சொல்லிவிட்டுப் போனது நினைவில் வந்திருக்கிறது. இந்த இரண்டு மணிநேரத்தை நாம் வீணடிக்க கூடாது என்று எண்ணிய சுந்தர்ராஜன் அங்கு படப்பிடிப்பு தளத்தில் அமர்ந்திருந்த கவுண்டமணியையும் செந்திலையும் பார்த்தாராம்.

இதையும் படிங்க: விஜய் செய்யத்தவறிய இரண்டு விஷயங்கள் இதுதான்!!.. மனம் திறந்த பிரபல தயாரிப்பாளர்…

Vaidehi Kathirunthal

அப்போது உடனே தனது கலை இயக்குனரை அழைத்து ஒரு பெட்ரோமாக்ஸ் லைட் எடுத்துக்கொண்டு வரச் சொன்னார் சுந்தர்ராஜன். அந்த பெட்ரோமாக்ஸ் லைட் வந்தபிறகு அதை வைத்து அங்கேயே உருவாக்கிய காட்சிதான் அந்த நகைச்சுவை காட்சி. அந்த இரண்டு மணிநேரத்திற்குள் மிகவும் அவசர அவசரமாக எடுக்கப்பட்ட அந்த நகைச்சுவை காட்சிதான் பின்னாளில் கிளாசிக் நகைச்சுவையாக வலம் வந்தது.

Arun Prasad
Published by
Arun Prasad