×

வாக்காளர் அடையாள அட்டையில் நாயின் புகைப்படம்! அதிர்ந்து போன முதியவர்...

மேற்கு வங்கத்தில் வாக்காளர் அடையாள அட்டையில் மனிதரின் புகைப்படத்திற்கு பதில் நாயின் புகைப்படம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

முர்சிதாபாத் மாவட்டம் ராம்நகர் கிராமத்தில் சுனில் கர்மார்க்கர் என்பவர், வாக்காளர் அடையாள அட்டை திருத்தப் பணிக்காக தேர்தல் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். திருத்தப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையில் தனது படத்திற்கு பதில் நாயின் புகைப்படம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனே தேர்தல் அலுவலர்களிடம் முறையிட்டார். 

வாக்காளர் அடையாள அட்டையில் சுனிலின் படம் மாற்றப்பட்டு விட்டது என்றும் விரைவில் புதிய அட்டை வழங்கப்படும் என்றும் தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News