×

பிக்பாஸ் முகேன் தந்தை மரணம் - நெட்டிசன்கள் இரங்கல்
 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற முகேனின் தந்தை மரணமடைந்துள்ளார்.
 

கமல்ஹாசன் பங்கேற்று நடத்திய பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இறுதிவரை போராடி வெற்றி பெற்றவர் முகேன். இவர் மலேசியாவை சேர்ந்தவர். சொந்தமாக பாடல்கள் எழுதி, இசையமைத்து அவரே பாடி ஆல்பங்களை வெளியிட்டு வருகிறார்.

இவரின், தந்தை பிரகாஷ் ராவ் நேற்று மாலை 6.30 மணியளவில் மாரடைப்பின் காரணமாக மரணமடைந்தார். அவருக்கு நடிகை வனிதா விஜயகுமார் உட்பட பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News