×

அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடி காதலியை மகிழ்ச்சிப்படுத்திய பிக்பாஸ் முகென்!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 17 பேர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மலேசியாவை சேர்ந்த முகன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகனை மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கியது.

 

முகன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்ததும் தனது காதலி யார் என்பதை அறிவித்தார். இதற்கு முன்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அபிராமி அவருடன் காதல் வயப்பட்டார். ஆனால், முகனோ தனக்கு வெளியில் நதியா என்ற வேறொரு பெண் இருப்பதாக கூறி நல்ல தோழியாக உன்னை எனக்கு பிடிக்கும் என கூறி நிறுத்திவிட்டார்.

இதையடுத்து திடீரென முகனின் தந்தை இறந்துவிட்டார். அந்த துயரத்தில் இருந்து மீண்டு வந்த அவர் தற்போது இன்று தனது காதலியுடன் அம்மாவின் பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள இந்த போட்டோவிற்கு இணையவாசிகள் பலரும் அவரது அம்மாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து நல்ல காதலியை கடவுள் உங்களுக்கு கொடுத்துள்ளார் என வாழ்த்தி வருகின்றனர்

From around the web

Trending Videos

Tamilnadu News