×

விஷயத்தையே சொல்லாமல் அம்மாவான பிக்பாஸ் ரம்யா - குழந்தையுடன் வெளியிட்ட முதல் புகைப்படம்!

கடந்த பிக்பாஸ் சீசன் 2ல் பங்குபெற்று ரசிகர்களுக்கு பரீட்சியமானார் ரம்யா. பழம்பெரும் நடிகர் என்எஸ்கிருஷ்ணனின் பேத்தியான இவர் பாடகியான இவர் திரைப்பட பாடல்களை பாடியுள்ளார்.  இவர் பிரபல சீரியல் நடிகர் சத்யா என்பவரை காதலித்து கடந்த ஆண்டு ரகசிய திருமணம் செய்துகொண்டார்.

 

இந்த திருமணத்தில் பிக்பாஸ் நண்பர்களான ஜனனி , மும்தாஜ் மற்றும் தர்ஷனின் முன்னாள் காதலி சனம் ஷெட்டி என ஒரு சில நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார். ஆம் இவர் கர்ப்பமாக இருந்த செய்தியே வெளிவரவில்லை..

இது குறித்து கூறியுள்ள ரம்யா "எல்லோருக்கும் வணக்கம்! நான் ஏன் இவ்வளவு குண்டாக இருக்கிறேன் என்று நீங்கள் நிறைய பேர் மீண்டும் மீண்டும் என்னிடம் கேட்டீர்கள் ... அதற்கு, நான் விரைவில் அந்த செய்திகளைப் சொல்கிறேன் என்று கூறி அந்த கேள்விகளுக்கு பதிலளித்து வந்தேன். இப்போது சொல்லவேண்டிய நேரம் ... ஆம், நான் சமீபத்தில் ஒரு குழந்தையை பிரசவித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இதற்குப் பிறகு நான் எனது உடல்நலம் மற்றும் உடற்பயிற்சிகளிலும் கவனம் செலுத்தப் போகிறேன். என பதிவிட்டுள்ள ரம்யாவிற்கு அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News