Categories: latest news throwback stories

மாதவனுக்கு முத்தம் கொடுத்ததால அலர்ஜி வந்துருச்சு…. மேடையில் அசிங்கப்படுத்திய விஜய் பட நடிகை….!

தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சச்சின் படத்தில் நடித்திருந்தவர் தான் பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசு. இப்படத்தை தொடர்ந்து ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்த பிபாஷா பாசு அதன் பின்னர் முழுவதும் பாலிவுட் சினிமாவில் தான் அதிக கவனம் செலுத்தினார்.

அந்த சமயத்தில் தமிழ் நடிகரான மாதவனும் பாலிவுட்டில் கால் பதித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை பிபாஷா பாசு நடிகர் மாதவனுடன் இணைந்து ஜோடி பிரேக்கர்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட பத்தாண்டுகள் ஆன நிலையில் பிபாஷா பாசு தற்போது இப்படம் குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

அதன்படி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிபாஷா பாசு கூறியிருப்பதாவது, “நான் நடிகர் மாதவனுடன் சேர்ந்து ஜோடி பிரேக்கர்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தேன். இந்த படத்தில் மாதவனுக்கு முத்தம் கொடுக்கும் காட்சியில் நடிக்க வேண்டி இருந்தது.

அந்த காட்சியில் நடித்த பின்னர் நான் மேக்கப் ரூமில் பல மணி நேரம் இருந்தேன். ஏனெனில் மாதவனுக்கு முத்தம் கொடுக்கும் போது அவரது வாயிலிருந்து வெங்காய வாசனை வந்தது. அது எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் அலர்ஜியாகி விட்டது” என கூறியுள்ளார்.

அந்த சமயத்தில் சாக்லேட் பாயாகவும் பல இளம் பெண்களின் கனவு கண்ணனாகவும் வலம் வந்த நடிகர் மாதவனுக்கு முத்தம் கொடுத்ததால் அலர்ஜி ஏற்பட்டு விட்டதாக பிரபல நடிகை கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்