தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிசியான காமெடி நடிகர் என்றால் அது யோகிபாபு தான் அவர் இல்லாத படங்களை பார்ப்பது அரிது அந்த அளவுக்கு நிற்க கூட நேரமில்லாமல் தொடர்ந்து ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்.
வாராவாரம் வரும் வெள்ளிக்கிழமை திரைப்படங்களில் கண்டிப்பாக யோகி பாபு பெயரும் இடம் பெற்றிருக்கும். அந்தளவுக்கு பிஸியான நல்ல நடிகர் என்ற பெயர் எடுத்த யோகி பாபுவிற்கு சிறிது களங்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது அவரது மேனேஜருக்கும் ஓட்டுநருக்கு பிரச்சனை இருந்து வந்துள்ளதாம்.
அந்த வாக்குவாதம் பிரச்சனை முற்றி சில நாட்களுக்கு முன்னர் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து இருவரும் சண்டையிட்டுக் கொண்டு உள்ளனர். அதன் பிறகு இது கைகலப்பாக மாறியுள்ளது இதனையடுத்து யோகி பாபு வந்து இருவரது பிரச்சனைகளையும் கேட்டறிந்து ஒரு முடிவெடுத்து விட்டார்.
இதையும் படியுங்களேன் –மொத்த கதையையும் மாத்திட்டார் கமல்!.. பல வருடம் கழித்து இயக்குனர் பேட்டி….
அண்மையில், தனது நெருங்கிய சினிமா வட்டாரங்களுக்கு ஒரு தகவல் அனுப்பியுள்ளார். அதாவது, தனது மேனேஜர் வேறு வேலைக்கு சென்றுவிட்டார். அதனால், இனி யார் போன் செய்தாலும் எனக்கே செய்துவிடுங்கள் எனது மேனேஜரை அழைக்க வேண்டாம்.
ஒரு பிஸியான நடிகரின் மேனேஜரே அவ்வபோது போனை எடுப்பதில்லை. இதில் பிஸியான நடிகர் எப்படி போன் எடுத்துப் பேசி மற்ற திரைப்படங்களில் நடிக்க உள்ளார் என்பது போகப்போகத்தான் தெரியும்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…