×

தயவு செஞ்சு உங்க படத்தை ரிலிஸ் பண்ணுங்க – தனுஷ் படத்தயாரிப்பாளருக்கு கோரிக்கை வைத்த தியேட்டர் அதிபர்!

நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தை தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தை தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. இந்த படத்தின் பெரும்பகுதிகள் வெளிநாடுகளில் படம் பிடிக்கப்பட்டதால் படத்தின் பட்ஜெட்டும் அதிகமானது. அதனால் ஓடிடி வெளியீடு சர்வராது என்பதால் திரையரங்கம் திறக்கட்டும் எனக் காத்திருக்கிறார் தயாரிப்பாளர் ஒய்நாட் சஷிகாந்த்.

இந்நிலையில் நவம்பர் 10 முதல் திரையரங்குகள் திறக்கப்பட உள்ள நிலையில் ரோகினி திரையரங்க உரிமையாளர் ‘ஜகமே தந்திரம் படத்தை தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய வேண்டும். ரசிகர்களை மீண்டும் திரையரங்குக்கு ஈர்க்க சரியான திரைப்படமாக இருக்கும்.  50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என்பது பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News