×

கவிஞர் சினேகன் கார் மோதி விபத்து - சிகிச்சை பெற்று வந்த வாலிபர் உயிரிழப்பு

 

சினிமாவில் பல திரைப்படங்களில் பாடல் எழுதியவர் சினேகன். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டவர். தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியில் இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார்.

கவிஞர் சினேகன் கடந்த 15ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஊனையூர் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த அருண்பாண்டி(28) என்பவர் வந்த பக்கின் மீது அவர் கார் மோதியது.

இதில் அருண்பாண்டியன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார். இந்த விவகாரம் சினேகனுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News