Categories: Cinema News latest news throwback stories

நீங்க விரும்புறீங்க நான் செய்றேன்….கமல் சொன்னதற்காக நடனமாடிய கவிஞர் வாலி…!

வாலிபக்கவிஞர் வாலி கமல் நடித்த ஹேராம் படத்தில் கமலுடன் இணைந்து நடித்துள்ளார். பொய்க்காத் குதிரை படத்தில் நடித்துள்ளார்.

அவர் தமிழ்சினிமா கவிஞர்களுள் ஒரு பொக்கிஷம் என்றால் மிகையில்லை.கவிஞர் வாலியுடன் ஒருமுறை நடிகை குஷ்பு நிகழ்ச்சி ஒன்றுக்காக நேர்காணல் நடத்தினார். அப்போது நடந்த சுவையான உரையாடல்களைப் பாருங்க.

படகோட்டி படத்தில் வரும் கரை மேல் பிறக்க வைத்தான் எங்களைக் கண்ணீரில் பிழைக்க வைத்தான். பணம் படைத்தவன் படத்திற்காக கண்ணீர் பிரிவதைப் பார்த்ததில்லை…தன் உயிர் பிரிவதைப் பார்த்ததில்லை ஆகிய பாடல்களில் இந்த வரிகள் எனக்குப் பிடிக்கும்.

Mannan amma song

அம்மா என்றழைக்காத பாடல் மன்னன் படத்திற்காக நான் எழுதியது. இது தான் எனக்குப் பிடித்த முதல் பாடல். இந்தப்பாடலில் உள்ள வரிகள் முழுவதும் பிடிக்கும். நியூ படத்திற்காக நான் எழுதிய எஸ்.ஜே.சூர்யாவின் காலையிலே நான் கண்விழித்ததும் கை தொழும் தேவதை அம்மா பாடல் பியூட்டிபுல் பாடல்.

மௌனராகம், அக்னிநட்சத்திரம், தளபதி, இதயத்தைத் திருடாதே ஆகிய மணிரத்னம் படங்களில் இளையராஜா மியூசிக்கில் நான் எழுதிய பாடல்கள் அனைத்தும் ஹிட். மஞ்சம் வந்த தென்றலுக்கு, சுந்தரி கண்ணால் ஒரு சேதி, பாட்டுத்தலைவ் பாடினால்;, அஞ்சலி அஞ்சலி அஞ்சலி, நின்னுக்கோரி வர்ணம் ஆகிய பாடல்களைச் சொல்லலாம். மணிரத்னம் வாலியைப்பற்றி நினைவுகூறும்போது அவருக்கூட உட்கார்ந்து வேலை செய்றது செம பிளஷர் என்கிறார் மணிரத்னம்.

தமிழ்சினிமாவில் கண்ணதாசனும், நானும் புரட்டிப் போடாத படங்களே இல்லை. முன்பே வா என் அன்பே வா என்ற பாடல் ரகுமான் மியூசிக்கிற்காக எழுதினேன்.

ஷ்ரேயா கோசலின் அழகான பாடல். எனக்கும் சுந்தர் சி.க்கும் சின்ன சின்ன சண்டை வரும்போது இந்த சாங் தான் எங்க பிரச்சனையைத் தீர்க்கும் என குஷ்பூ சிரித்துக்கொண்டே சொல்கிறார். உடனே வாலி, அப்ப நீங்க தான்எனக்கு ராயல்டிய தருணும் என்கிறார். கறவை மாடு மூணு என்ற பாடல் மகளிர் மட்டும் படத்திற்காக எழுதியுள்ளார்.

நீங்க என்ன விரும்புறீங்கன்னு நான் எழுதுவேன். ஆனா அது எப்படியாவது ஹிட்டாகணும்னு நினைச்சு எழுதுவேன். கமல் படமான சத்யாவில் நகரு நகரு பாடலில் என்னை ஆடச் சொன்னார்.

vaali and kamal in Heyram

நான் ஆடினேன். நீங்க கவிஞனா…ஒரு பொம்பள கூட போய் ஆடுறீங்களன்னு என்ன கேட்டாங்க. கமல் என் ப்ரண்ட். என்னை ஆடுங்கறான். ஆடிட்டுப் போறேன். அது என் சொந்தக்கருத்து. நீங்க என்ன விரும்புறீங்களோ அதைச் செய்றதுக்குத் தான் நான் இருக்கேன் என கூலாகச் சொல்கிறார் வாலி.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v