Connect with us

Cinema News

இதுக்குதான்யா புது டைரக்டருக்கு படம் பண்றது இல்ல! இயக்குனரால் கடுப்பான வாலி…

தமிழ் சினிமாவில் உள்ள பாடலாசிரியர்களில் கண்ணதாசனுக்கு பிறகு பெரிதாக மக்களால் அறியப்படுபவர் கவிஞர் வாலி. எம்.ஜி.ஆர் கால கட்டத்தில் துவங்கி தற்போதைய தலைமுறையினரின் கதாநாயகர்களாக இருக்கும் விஜய்,அஜித் கால கட்டம் வரை தமிழ் சினிமாவில் பாடல் வரிகளை எழுதி வந்தவர் வாலி.

ப்ளாக் அண்ட் ஒயிட் காலகட்டத்தில் இருந்து இப்போது வரை தமிழ் சினிமாவில் இசை பலவராக மாறி உள்ளது. அப்படி பலவாறு இசைகள் மாறி அமைந்த போதும் அதற்கு தகுந்தார் போல பாடல் வரிகளை எழுதி அசத்தி வந்தார் வாலி.

முக்கியமாக மங்காத்தா திரைப்படத்தில் பாடல் வரிகளை அவர் எழுதும் பொழுது அதைக் கண்டு தானே அசந்து போனதாக இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் ஒரு இருப்பார். இப்படியிருக்கும்போது வாலியிடமே வம்பிழுத்துள்ளார் ஒரு இயக்குனர்

இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான சில்லுனு ஒரு காதல் திரைப்படத்திற்கு பாடல் வரிகளை வாலிதான் எழுதினார்.  அந்தப் படத்திற்கு பாடல் வரிகளை எழுதும் பொழுது அதன் காதல் காட்சிகளை முழுமையாக விவரித்தார் கிருஷ்ணா.

கடுப்பான வாலி:

அப்போது கோபமான வாலி நான் இதுவரை தமிழ் சினிமாவில் எவ்வளவு காதல் பாடல்கள் எழுதி இருக்கிறேன் தெரியுமா? என்னிடமே நீ விளக்கிக் கொண்டிருக்கிறாயா என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணா ஆனால் இது என்னுடைய கதைதானே சார், இதில் காதல் எப்படி இருக்கும் என்று எனக்குத் தானே தெரியும் என்று கூறிவிட்டார். இதனால் கடுப்பான வாலி படப்பிடிப்பு தளத்தை விட்டு கிளம்பி சென்று விட்டார்.

அதன் பிறகு மறுநாள் நள்ளிரவில் இயக்குனருக்கு போன் செய்து என்ன செய்து கொண்டிருக்கிறாய் என கேட்டுள்ளார் வாலி. தூங்கிக் கொண்டிருக்கிறேன் என்று கூறிய இயக்குனரிடம் என்னை தூங்க விடாமல் செய்துவிட்டு நீ மட்டும் தூங்கிக் கொண்டிருக்கிறாயா? இப்பொழுது ஒரு பாட்டு எழுதி இருக்கிறேன்.

அதில் ஏதாவது குறை சொல்லு பார்ப்போம் என்று கூறினார் வாலி. அந்த பாடல்தான் திரைப்படத்தில் முன்பே வா என் அன்பே வா என்று வெளியானது படம் வெளியான பொழுது அந்த ஒரு பாடல் மட்டும் பெரும் ஹிட் கொடுத்தது.

இதையும் படிங்க: பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் குடும்பத்திற்கு எம்.ஜி.ஆர் செய்த பேருதவி!.. இப்படியும் ஒரு மனிதரா?!..

Continue Reading

More in Cinema News

To Top