×

மாஸ்டருக்காக புள்ளிங்கோ வெயிட்டிங் - வைரலாகும் புகைப்படங்கள்

மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற  ‘வாத்தி கம்மிங்’ பாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இப்பாடல் நல்ல குத்தாட்ட பாடலாக இது அமைந்துள்ளது. 

மேலும், இப்படத்தில் இடம் பெற்ற ‘வாத்தி ரெய்டு’பாடல் நேற்று வெளியானது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 6.30 மணியளவில் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், அந்த ஹோட்டலில் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வந்தவர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படங்களை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News