போலீசாரிடம் சிக்கிய அந்த ஆடியோ... சித்ரா கணவர் ஹேமந்த் கைது பின்னணி..

சின்னத்திரை நடிகை சித்ரா மறைவை இன்னும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.அவரது இறப்பிற்கு பின் சித்ரா பற்றிய நிறைய விஷயங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. இந்த வழக்கில் அவரின் கணவர் ஹேமந்தை போலீசார் கைது செய்துள்ளனர்.
டிசம்பர் 8 படப்பிடிப்பை முடித்து ஹோட்டல் வந்த சித்ரா கடைசியாக அவரது மாமனாருக்கு தான் போன் செய்துள்ளார். ஹேமந்துடன் பிரச்சனைக்கு பிறகு மாமனாருக்கு போன் செய்து, கேவலமான வார்த்தைகளால் அவர் திட்டுகிறார், விரைவில் திருமணம் நடக்கவுள்ள நிலையில் இப்படியெல்லாம் பேசுவது கஷ்டமாக இருக்கிறது என அழுது புலம்பியுள்ளார் சித்ரா.
ஹேமந்தால் பல பிரச்சணைகளை சந்தித்திருக்கிறார். சித்ராவிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டுவது, சந்தேகப்படுவது, படப்பிடிப்பி்ல் இப்படி தான் நடந்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் விதி முறைகள் போட்டு மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார்.
மாமனாரிடம் அவர் அழுது புலம்பிய ஆடியோ அவரது செல்போனில் இருந்து ஹேமந்த் அழித்துவிட்டதாக தெரிகிறது. சைபர் கிரைம் மூலம் அந்த ஆடியோவை போலீசார் மீட்டெடுத்துள்ள போது, அதுவே முக்கிய ஆதாரமாக மாறியது. அதன் அடிப்படையிலேயே போலீசார் ஹேமந்தை போலீசார் கைது செய்துள்ளனர் எனக்கூறப்படுகிறது.