×

அடுத்த ஆப்பு ஜி.பி.முத்துவுக்கா?.. காவல் நிலையத்தில் குவியும் புகார்!....

 
gp muthu

டிக் டாக் செயலி மூலம் பலர் வைரலாக மக்களிடம் புகழ் பெற்றனர். அதில், குறிப்பிட்டவர் ஜிபி முத்து. டப்ஷ்மாஷ் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர். தொடர்ந்து, வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவர் வீடியோக்களும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ரவுடி பேபி சூர்யாவுடன் இணைத்து பேசப்பட்டார். தொடர்ந்து, பல சர்ச்சைகளை சந்தித்தவர். சில மாதங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்று பரபரப்பை ஏற்படுத்தினார். இவரை திரைப்படங்களில் நடிக்க வைக்கும் முயற்சிகளும் நடந்து வருகிறது.

muthu

தற்போது யுடியூப்பில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவரை கிண்டலடிக்கும் விதமாக இவருக்கு மிகவும் அசிங்கமான பொருட்களை பலரும் கொரியர் அனுப்பி வருகின்றனர். அவற்றையெல்லாம் அவர் வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், ஜி.பி.முத்து கலாச்சாரத்தை சீரழித்துவிட்டதாக அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே, ஆபாசமாக பேசிய யுடியூப் மதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே, அந்த வரிசையில் ஜிபி முத்து மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

From around the web

Trending Videos

Tamilnadu News