Connect with us

Cinema News

சாய் பல்லவி மீது போலீசார் வழக்கு பதிவு.!? திடுக்கிட்டு போன ரசிகர்கள்…

மலையாள சினிமாவில் பிரேமம் எனும் திரைப்படம் மூலம் அறிமுகமாகி தென்னிந்திய சினிமா முழுக்க தெரிந்த முகமாக மாறியுள்ளார் சாய் பல்லவி. அதன் பிறகு தெலுங்கில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் தற்போது முன்னனி நடிகையாக வலம் வருகிறார்.  ஒரு முன்னணி தெலுங்கு நட்சத்திரமே லேடி பவர் ஸ்டார் (நம்ம ஊரு லேடி சூப்பர் ஸ்டார் போல ) என புகழாரம் சூட்டினார்.

இவர், அண்மையில், காஷ்மீர் பைல்ஸ் படத்தை பற்றி கருத்து கூறுகையில், ‘காஷ்மீர் பண்டிட்டுகள் கொலை செய்யப்படுவதாக காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தில் காட்டபட்டுள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீரில், காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்படுவதும், கொரோனா காலத்தில் மாடுகளை ஏற்றி சென்றவர்களை வழிமறித்து அவர்களை ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல சொல்லி தாக்குதல் நடத்தி கொல்வதும் ஒன்றுதான். இரண்டுமே தவறுதான்.’ என தைரியமாக தனது கருத்தை தெரிவித்தார்.

இதையும் படியுங்களேன் –  இந்த நெல்சன் திருந்தவே இல்லை.! ஒரு போஸ்டரில் முழு கதையும் சொல்லிட்டீங்களே.! கடுப்பான ரசிகர்கள்….

 இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் தாங்கள் ஆதரவை தெரிவித்தனர். அதே போல் எதிர்ப்பு குரல்களும் வலுத்தன. இது குறித்து, ஒரு அமைப்பினர் , ஹைதிராபாத் போலீசில் புகார் அளித்துள்ளனர், பசு காவலர்களையும், தீவிரவாதிகளையும் ஒன்றாக இணைத்து பேசியது தவறு. அதற்காக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தனர்.

இதனை பொருட்டு சாய் பல்லவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தீயாய் பரவியது. இது குறித்து போலீசார் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுளளது. அதாவது, புகார் அளிக்கப்பட்டது உண்மை தான். ஆனால் சாய் பல்லவி மீது வழக்கு பதிவு எல்லாம் போடவில்லை. அவரிடம் சட்ட ரீதியில் விளக்கம் மட்டுமே கேட்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top