Connect with us
விஜய்

Cinema News

விஜயை டோட்டல் டேமேஜ் செய்ய பக்கா பிளான்.. வான்டடா வந்து சிக்கிய த்ரிஷா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். சினிமாவில் உச்சம் தொட்ட பின்னர் தற்பொழுது விஜய் அரசியலில் களமிறங்கியுள்ளார். சினிமா மற்றும் அரசியலைப் பொறுத்த வரைக்கும் கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை விட கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் தான் அதிகம். அப்படி விஜயின் அரசியல் ஆட்டத்தை முடிக்க பல கும்பல்கள் திட்டம் தீட்டி கொண்டு வருகிறது.


இந்நிலையில் இதைப் பற்றி சினிமா விமர்சகரும் மூத்த பத்திரிகையாளருமான செய்யாறு பாலு கூறுகையில்,” இன்று இந்திய அரசியலில் பெரும் பேசும் பொருளாக விஜய் உருவெடுத்துள்ளார். நான் விஜயின் கட்சி சார்ந்தவரோ அல்லது ஐடி விங் கிடையாது. விஜயின் வளர்ச்சி எப்படி உச்சத்தில் இருக்கிறதோ அதற்கு சமமாக எதிர்ப்புகளும் இருக்கிறது. விஜய் பற்றி பல அவதூறு, கீழ் தனமான விமர்சனங்கள் இன்னும் வந்து கொண்டு தான் இருக்கிறது”.

”இருந்தாலும் 2026 ஆம் ஆண்டுக்கான விஜயின் அரசியல் பயணம் பலருக்கு கலக்கத்தை உண்டு பண்ணியிருக்கிறது. என்னதான் விஜயின் டிவிகே கட்சியின் மீது மோசமான விமர்சனங்கள் வந்தாலும் பொதுவெளி என்று வரும்போது அதை விஜய் சந்தித்துதான் ஆக வேண்டும். ஒவ்வொரு முறையும் ஒருத்தரைப் பற்றி விமர்சனம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் கேலி பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் நபர் அந்த தன்னுடைய அரசியல் எதிரிகளை டிஸ்டர்ப் செய்கிறார் என்று அர்த்தம்”.

” அதனால் வரும் கோபத்தின் வெளிப்பாடுதான் விஜயை எப்படியாவது அரசியலில் இருந்து விரட்டி விட வேண்டும் என்று விமர்சனம் செய்கிறார்கள். துபாயில் நடந்த சைமா விருது வழங்கும் விழாவில் ஒவ்வொரு ஃபோட்டோவையும் திரையில் காண்பித்து அவர்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்று த்ரிஷாவிடம் சொல்கிறார்கள். அப்படி விஜயின் புகைப்படம் ஸ்கிரீனில் வந்தவுடன் அங்கிருந்த ரசிகர்கள் கத்தி ஆரவாரம் செய்ய தொடங்கிவிட்டனர். அங்கிருக்கும் அனைத்து கேமராக்களும் த்ரிஷா மீது போக்கஸ் வைக்கின்றன”.

”த்ரிஷா தன் கருத்தை கூறுகிறார் அதில்,’ விஜய் புதிய பயணத்தை தொடங்கி இருக்கிறார். அந்தப் பயணத்தில் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள். அந்த பயணத்தில் அவர் வெற்றி பெறுவார்’. என்று கூறியுள்ளார். உண்மையிலேயே இது நாகரிகமான பதில் தான். உடனே இது விஜய் கட்சி இல்லை த்ரிஷா கட்சி. த்ரிஷா=விஜய்=கீர்த்தி சுரேஷ் என ஹேஸ்டாக்குகளை போட்டு அடித்து தள்ளுகின்றனர். அடிப்படையில் த்ரிஷா விஜய் உடன் அதிக படங்களில் நடித்துள்ளார்”.

”எப்படி எம்ஜிஆர் இருக்கு சரோஜா தேவியோ அது போல தான். இது எல்லா நடிகருக்கும் உண்டு. ஆனால் த்ரிஷாவும் விஜய்யும் இணைந்திருக்கும் புகைப்படங்களை இஷ்டத்துக்கு கேப்ஷன் போட்டு பகிர்வது விஜயின் இமேஜ் எப்படியாவது டேமேஜ் பண்ணிவிட வேண்டும் என செய்தாலும் அது அவருக்கு நல்ல இமேஜாக தான் மாறும். ஒருவேளை த்ரிஷா விஜயின் படத்தை பார்த்து நோ கமெண்ட்ஸ் என்று சொல்லி இருந்தால் அதற்கும் விஜயை த்ரிஷாவே சொல்லிட்டாரு விஜய் நீ வீட்டுக்கு போப்பா அப்படின்னு அடிக்க ஆரம்பித்து விடுவார்கள்”.

”அதுமட்டுமில்லாமல் விஜய் சங்கீதா உடன் பிரிந்ததாகவும் கிளப்பி விடுகிறார்கள். தொடர்ந்து அவருக்கு பர்சனல் அட்டாக் செய்கிறார்கள். விஜயின் பின்னால் லட்சக்கணக்கான இளைஞர் கூட்டம் இருக்கிறது. அதனால் அவரை ஏதும் செய்ய முடியாது. ஜனவரியில் தெரியவரும் தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியாக விஜயின் கட்சியின் இருக்கும் என்று”. என தன்னுடைய கருத்தை பகிர்ந்துள்ளார்.

author avatar
SATHISH G
சதீஷ் பி.இ. பட்டதாரியான இவர் 3 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 2 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top