×

எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் ஆபிரஹாம் லிங்கன் - பொள்ளாச்சி ஜெயராமன் புகழாரம்

 

தமிழகத்தில் ஆபிரஹாம் லிங்கன் எடப்பாடி பழனிச்சாமி என பொள்ளாச்சி ஜெயராமன் பாராட்டி பேசியுள்ளார்.

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னை வானகரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை ஏற்றார். ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி,அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

admk

இந்த கூட்டத்தில் முதல்வர் வேட்பாளரக பழனிச்சாமியை ஏகமனதாக தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2500 வழங்கியதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து இந்த பொதுக்குழுவியில் 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

இக்கூட்டத்தில் பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ‘தமிழ்நாட்டின் ஆபிரகாம் லிங்கனாக முதல்வர் பழனிச்சாமி செயல்படுகிறார். அதேபோல், ஜெயலலிதாவால் நேரிடையாக 2 முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓ.பன்னீர் செல்வம்’ என புகழ்ந்தார். அதேபோல், அக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி ‘ இராமர், லட்சுமணர் போல் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். மருது சகோதரர்கள் போல அவர்கள் இருவரும் இணைந்து வெற்றியை பெறுவார்கள் என பாராட்டினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News