Categories: Cinema News latest news

புருஷனுக்கு போட்டியா பொண்டாட்டியா… அதுவும் அப்பா சப்போர்ட்டுல.. என்னம்மா ஐஸ்வர்யா நியாயமா..?

Aishwarya Rajinikanth: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய இயக்கத்தில் தயாராகி வரும் லால் சலாம் படத்தினை வைத்து தன்னுடைய கணவருடன் போட்டி போடும் லெவலுக்கு வந்து விட்டார். அதுகுறித்த சுவாரஸ்ய தகவல் தற்போது இணையத்தில் ஹைலைட்டாக உலா வருகிறது.

தென் தமிழகத்தின் கிரிக்கெட் வீரர்களின் கேரியரை மையமாக வைத்து உருவக்கப்பட்டு வரும் திரைப்படம் லால் சலாம். இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கிறார். முக்கிய வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார்.

இதையும் படிங்க: ‘அடங்கொப்பன் தாமிரபரணில தலைமுழுக’ எத்தனை பேர் ரசிச்சிருக்கீங்க? எத வச்சு பேசுனார் தெரியுமா ஆனந்தராஜ்?

முதலில் சின்ன ரோலில் தான் ரஜினியை நடிக்க வைக்க கேட்டு இருக்கிறார் ரஜினிகாந்த். ஆனால் ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்துக்கு இரண்டாம் பாதியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறதாம். படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்களாம்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் துவங்க இருந்தது. ஆனால் திடீரென லால் சலாமின் முக்கிய புட்டேஜ்கள் மிஸ்ஸானதாகவும் அதில் அதிகம் ரஜினியின் காட்சிகளே இருந்ததாக ஒரு தகவல் கசிந்தது. பின்னர் அது உதவி இயக்குனர்களால் பரபரப்பட்ட வதந்தி எனவும் கூறினர். 

இதையும் படிங்க: நடிக்க ஓகே சொன்ன சிவாஜி.. ஆனாலும் ரிஜெக்ட் செய்த சேரன்!.. இதுதான் காரணமா?..

தற்போது இதுவும் சர்ச்சையாகி இருக்கிறது. அதே தினத்தில் தான் தனுஷின் கேப்டன் மில்லரையும் ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனால் கணவருக்கு எதிராக அப்பாவும், மகளும் களமிறங்க யார் வெற்றியாளர் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Published by
Shamily