Categories: Cinema News latest news throwback stories

ராம்சரண் மனைவிக்கு குழந்தை உருவானது எப்படி தெரியுமா?.. உண்மையை கூறிய பொன்னம்பலம்!..

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர்களுக்கென்று எப்போதுமே ஒரு வரவேற்பு உண்டு. எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் நம்பியார், அசோகன், எம் ஆர் ராதா போன்றவர்கள் பிரபலமான வில்லன் நடிகர்களாக இருந்தனர்.

அதற்குப் பிறகு ராதாரவி, நாசர் போன்றவர்கள் அந்த இடத்தை பிடித்தனர் அந்த வகையில் நடிகர் பொன்னம்பலமும் முக்கியமான வில்லன் நடிகராவார். மற்ற நடிகர்களை போல் வில்லனாக மட்டும் நடிக்காமல் ஸ்டண்ட்மேனாக சினிமாவிற்கு வந்தவர் பொன்னம்பலம்.

ponnambalam

சண்டைக் காட்சிகளில் பல அடிகளை வாங்கி கஷ்டப்பட்டு நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று கடைசியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார் பொன்னம்பலம். போன வருடம் பொன்னம்பலம் கடுமையான உடல் நல பிரச்சனைக்கு உள்ளானார். அவரிடம் இருந்த பணத்தை எல்லாம் செலவு பண்ணியும் கூட அவரால் அவர் உடலை சரி செய்ய முடியவில்லை.

கடைசியில் டயாலிசிஸ் செய்வதற்கு பணம் இல்லாமல் அப்படியே சுற்றிக் கொண்டிருந்தார் பொன்னம்பலம். யாரிடம் காசு கேட்பது என்றும் தெரியவில்லை அந்த சமயத்தில் அவர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்ற பொழுது சிரஞ்சீவியிடம் காசு கேட்கலாம் என்று அவருக்கு தோன்றியுள்ளது.

உண்மையை கூறிய பொன்னம்பலம்:

அதன் பிறகு சிரஞ்சீவிக்கு ஒரு மெசேஜ் மட்டும் செய்தார். ஏனெனில் பழைய காலங்களில் சிரஞ்சீவியுடன் சேர்ந்து சில படங்களில் நடித்துள்ளார் பொன்னம்பலம். அவர் அனுப்பிய மெசேஜை பார்த்தவுடனே அவருக்கு போன் செய்து விஷயத்தை அறிந்த சிரஞ்சீவி, உடனே அப்போலோ மருத்துவமனைக்கு பேசி அங்கு பொன்னம்பலம் சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார்.

ponnambalam

அதன் பிறகு கிட்டத்தட்ட ஆறு மாசம் அங்கு சிகிச்சை பெற்றார் பொன்னம்பலம். அதற்கான மொத்த செலவையும் சிரஞ்சீவி ஏற்றுக்கொண்டார். தற்சமயம் பேட்டியில் இதுக்குறித்து பொன்னம்பலம் கூறும் பொழுது கடவுள் என்று ஒருவரை நான் பார்த்ததில்லை. நான் நேரில் கண்ட கடவுள் என்றால் அது சிரஞ்சீவியாகதான் இருக்க முடியும். என்று கூறினார்.

மேலும் சிரஞ்சீவிக்காக நான் மனமாற நன்றி கூறினேன் அதன் பிரதிபலனாக தான் சிரஞ்சீவியின் மருமகள் தற்சமயம் கர்ப்பமாக இருக்கிறார். பத்து வருடமாக அவர்கள் பிள்ளை இல்லாமல் இருந்தார்கள் என்று கூறியுள்ளார் பொன்னம்பலம்.

Published by
Rajkumar