Categories: Cinema News latest news

பொன்னியின் செல்வனின் புதிய நட்சத்திரங்கள்… ஒரிஜினலை தாண்டி வைரலாகும் விஜய், சூர்யா, நயன்தாரா, அனுஷ்கா….

தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக காத்திருக்கும் திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இந்த படத்தை இயக்குனர் மணிரத்தனம் இயக்கியுள்ளார். லைக்கா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை மிகப்பெரிய பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக், படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் என 30 மேற்பட்ட பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.

இதையும் படியுங்களேன்- விஜய் படம் பற்றிய திமிர் பேச்சு.. கடைசியில் ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட பீஸ்ட் பிரபலம்…

இந்த நிலையில்,  படத்தின் டீசர் வெளியாவதற்கு முன்பே படக்குழுவினர் ஒவ்வொருதர்களுடைய கதாபாத்திரத்திரத்திற்கான போஸ்டர்களை வெளியிட்டனர். அதனை ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தவாரும் எடிட் செய்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டார்கள்.

அந்த வகையில், தற்போது ஒரிஜினலை தாண்டி சில போஸ்டர்கள் வைரலாகி வருகிறது.  அதில் வந்தியத்தேவனாக விஜய்யும், அருள்மொழி வர்மனாக சூர்யாவையும், நந்தினியாக நயன்தாராவும், குந்தவையாக அனுஷ்காவையும் வைத்து எடிட் செய்துள்ளார்கள்.  இதனை பார்த்த ரசிகர்கள் இவர்களே இந்த படத்தில் நடிச்சிருக்கலாமே என தெரிவித்து வருகிறார்கள்.

Manikandan
Published by
Manikandan