'White' படத்தில் ரவி மோகனுக்கு ஜோடி 'பொன்னியின் செல்வன்' நடிகையா?
Updated: Jul 21, 2026, 21:47 IST
ரவி மோகன் நடித்திருக்கும் 'கராத்தே பாபு' ரிலீஸுக்கு ரெடியாகி விட்டது. கணேஷ்.கே.பாபு இயக்கியுள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 28-ஆம் தேதி திரைக்கு வரப்போகிறது.
இதையடுத்து ரவி மோகன் நடித்து வரும் புதிய படத்தை அறிமுக இயக்குநர் GND ஷியாம் குமார் இயக்கி வருகிறாராம். ஃபிலிம் சிட்டியில் இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்திற்கு 'White' என்று டைட்டில் சூட்டப்போகிறார்களாம். இதை 'ரோமியோ பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனம் சார்பில் ராகுல் தயாரிக்கிறார்.

இதற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து வருகிறார். தற்போது, இதில் ரவி மோகனுக்கு ஜோடியாக நடிக்க நடிகை சோபிதா துலிபாலா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆல்ரெடி மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படத்தில் இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
