Categories: Cinema News latest news

பொன்னியின் செல்வனை விலை பேசிய OTT நிறுவனம்.! இதுதான் எங்க நம்பிக்கை., வேண்டாம் பிளீஸ்..

தெலுங்கு சினிமாவில் இருந்து பாகுபலி, RRR எனும் பிரமாண்ட வெற்றி திரைப்படங்கள் வெளியாகி இந்திய சினிமாவையே மிரள வைத்துவிட்டார் இயக்குனர் ராஜமௌலி. அதன் பின்னர் கன்னட சினிமாவில் இருந்து வெளியாகி தற்போது இந்திய சினிமா பாக்ஸ் ஆபிஸை மிரள வைத்து வருகிறார் நம்ம கே.ஜி.எப் 2 ராக்கி பாய்.

அதே போல பிரமாண்ட திரைப்படம் தமிழில் எப்போது வரும் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், இயக்குனர் மணிரத்னம் அந்த பொறுப்பை கையில் எடுத்து கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கி வருகிறார். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி , ஐஸ்வர்யா ராய் என பலர் நடித்து உள்ளனர்.

இப்பட ஷூட்டிங் எல்லாம் முடிந்து, தற்போது படத்தின் எடிட்டிங், இசை கோர்ப்பு போன்ற பணிகள் நடைபெற்று வருகிறதாம். இப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.

இதையும் படியுங்களேன் -இப்படியும் செய்வாங்களா.?! விஜய்யின் மெகா ஹிட் இயக்குனருக்கு வேறு மாதிரியான சிக்கல்.!?

இந்நிலையில் இப்படம் OTTக்கு விலை பேசப்பட்டது என்ற தகவல் அண்மையில் வெளியானது. அதுவும் சுமார் 125 கோடிக்கு அமேசான் இப்படத்தை விலை பேசிவிட்டது என தகவல் வெளியானது. இதனை கேட்டதும் ரசிகர்கள் அதிர்ந்து விட்டனர். அதன் பிறகு தான் உண்மை வெளியில் வந்தது.

ஆம், திரையில் ரிலீஸ் ஆகி பின்னர் OTTயில் வெளியாக தான் இந்த படம் 125 கோடிக்கு விலை பேசப்பட்டதாம். முதல் இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து இந்த படம் சுமார் 500 பட்ஜெட் என கூறப்பட்டுள்ளது. விரைவில் இப்படம் பற்றி அடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Manikandan
Published by
Manikandan