என்னை வாழ வைப்பதே அவர் தான்.... மன்னிப்பு கேட்ட பூஜா ஹெக்டே!
பூஜா ஹெக்டே:
திரைப்பட உலகில் முகமூடி திரைப்படத்தின் மூலமாக ஹீரோயின் ஆக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. ஜீவாவுடன் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். முதல் படமே மிஷ்கின் இயக்கத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானதால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டார் .

ஆனால், இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்தியில் ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக அறிமுகமாகி இருந்தார். அந்த படமும் தோல்வியை தழுவியது. அதை எடுத்து தெலுங்கு சினிமா பக்கம் கவனத்தை செலுத்திய போது தொட்டதெல்லாம் ஹிட் அடித்தது.
துவடே ஜகநாதம், ரங்கஸ்தலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார். ரஜினியுடன் கூலி தற்போது விஜய்யின் கடைசி திரைப்படமாக வெளிவர இருக்கும் ஜனநாயகம் திரைப்படத்திலும் பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார் .
என்னை வாழ வைப்பதே அவர் தான்:

ரசிகர்களை குறித்து பேசி இருக்கும் பூஜாவின் பேட்டி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. எங்களை வாழ வைப்பது ரசிகர்கள் தான். சூழ்நிலை காரணமாக சில நேரங்களில் சில மேடைகளில் ரசிகர்களை கண்டு கொள்ள முடியாமல் போகிறது .
அதற்காக நாங்கள் கெத்து காட்டுறோம். சீன் போடுறோம் என்றெல்லாம் அர்த்தமில்லை. உண்மையிலேயே ரசிகர்கள் எங்களின் கடவுள் தான். சூழ்நிலை அப்படி எங்களை சில நேரங்களில் மாற்றி அமைக்கிறது என பூஜா ஹெக்டே தெரிவித்திருக்கிறார். அவரின் இந்த புரிதல் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுதல்களை பெற்று வருகிறது.
