Categories: Cinema News latest news

படமே ஓடலைன்னாலும் பந்தா பண்ணும் பூஜா ஹெக்டே!.. ஆத்தாடி இத்தனை கோடிக்கு புது கார் வாங்கியிருக்காரா?..

தொடர்ந்து பூஜா ஹெக்டே நடித்த 4 படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் இருந்து அவரை தூக்கி விட்டு தளபதி 68ல் கமிட் ஆகி உள்ள மீனாக்‌ஷி சவுத்ரியை நடிக்க வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் தனது பிறந்தநாளை மாலத்தீவில் கொண்டாடிய பூஜா ஹெக்டே தனக்கு தானே பெரிய பரிசு ஒன்றை கொடுத்துக் கொண்டு சந்தோஷமாகி உள்ளார்.

இதையும் படிங்க: சண்டையா? அஜித்துக்கும் தனக்கும் இருக்கிற bonding பற்றி வாய்திறந்த பிரசாந்த் – இவங்கள போய் இப்படி நினைச்சிட்டோமே

ராதே ஷ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா மற்றும் கிஸி கா பாய் கிஸி கா ஜான் படங்கள் சரியாக போகவில்லை என்றாலும், நடிகை பூஜா ஹெக்டே ஒவ்வொரு படத்திலும் நடிக்க தலா 4 கோடி என அதிரடியாக கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 16 கோடிக்கும் மேல் சம்பாதித்துள்ளதாக கூறுகின்றனர்.

மேலும், ஏகப்பட்ட விளம்பர படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே கார் மீது தனக்கு உள்ள விருப்பம் காரணமாக அதிரடியாக 4 கோடி ரூபாய்க்கு ரேஞ்ச் ரோவர் சொகுசு காரை விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு வாங்கி பூஜை போட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க: திருட்டு கதையில் நடித்து திணறிய பிரபுதேவா..! கடைசியில் சூப்பர்ஸ்டார் உதவியால் எஸ்கேப் ஆன சம்பவம்..!

கூடிய சீக்கிரமே நடிகை பூஜா ஹெக்டே இந்தி படம் ஒன்றில் கமிட் ஆகப் போகிறார் என்றும் அதன் அட்வான்ஸ் கிடைத்த சந்தோஷத்தில் தான் இப்படியொரு பிரம்மாண்டமான வெள்ளை நிற ரேஞ்ச் ரோவர் காரை வாங்கி அதற்கு முன்னதாக தனது குடும்பத்துடன் பூஜை போட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து பாடலுக்கு ஆடி அனைவரையும் கவர்ந்த பூஜா ஹெக்டேவுக்கு நல்ல கதையம்சம் கொண்ட படம் கிடைத்தால், அடுத்த வெற்றியை அவர் வரும் ஆண்டில் ருசிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Saranya M
Published by
Saranya M