Connect with us

Cinema News

புது படமே கிடைக்கலைன்னா என்ன?.. பல கோடிக்கு மும்பையில் பங்களா வாங்கிய புட்ட பொம்மா!..

நடிகை பூஜா ஹெக்டே மும்பையில் புதிதாக பெரிய பங்களா வீடு வாங்கி இருப்பதாக பாலிவுட் வட்டாரமே தற்போது பரபரப்பாக பேசி வருகிறது. நடிகை பூஜா ஹெக்டே மும்பையில் பிரம்மாண்ட வீட்டில் இருக்கும் வீடியோ காட்சிகளும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் ஹீரோயினாக நடித்த சினிமாவில் அறிமுகமானவர் தான் பூஜா ஹெக்டே. முதல் படமே தோல்வியை தழுவிய நிலையில் அதன் பின்னர் தெலுங்கு சினிமா பக்கம் தாவிய பூஜா ஹெக்டே பாலிவுட் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

இதையும் படிங்க: அனிமல் படத்தை மேடையிலேயே அசிங்கப்படுத்திய சித்தார்த்!.. பாய்ஸ் படத்துல ஓடுனதுலாம் மறந்துடுச்சா!..

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அலா வைகுந்தபுறமுலோ திரைப்படம் பூஜா ஹெக்டேவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. அந்தப் படத்திற்கு பிறகு தமிழில் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்தார். பிரபாஸ் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். பாலிவுட்டில் சல்மான்கானுக்கு ஜோடியாக வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்தார்.

ராம்சரண், சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ஆச்சார்யா படத்திலும் இவர்தான் ஹீரோயின். ஆனால், அல்லு அர்ஜுன் படத்தைத் தவிர பூஜா ஹெக்டே நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவின. கடைசியாக மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக குண்டூர் காரம் படத்தில் கமிட்டான பூஜா ஹெக்டேவை பாதியிலேயே படத்திலிருந்து நீக்கிவிட்டனர்.

இதையும் படிங்க: பட்டுப் புடவையில் பை ஒன் கெட் ஒன் ஃஃபாரா?.. விஜய் டிவி நடிகை செய்த பர்ச்சஸ் வீடியோ!…

அதன் பின்னர் சுமார் ஒரு வருஷம் புதிய படங்களிலிருந்து கிடைக்காமல் பூஜா இருந்து வந்த நிலையில், தற்போது 40 கோடி ரூபாய்க்கு மும்பையில் கடலை பார்த்தபடி பங்களா வீடு ஒன்றை இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சினிமா மற்றும் விளம்பரங்களில் நடித்தே பல கோடி சொத்து சேர்த்து வைத்த பூஜா ஹெக்டே எப்படியாவது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக மாற வேண்டும் என்பதற்காக மும்பையிலேயே குடியேறி இருக்கிறார். சூர்யா உள்ளிட்ட பலர் மும்பையில் வீடு வாங்கிய நிலையில், பூஜா ஹெக்டேவும் வாங்கியிருக்கிறார்.

இதையும் படிங்க: வீக் எண்டுக்கு இது செம டீரீட்டு!.. சைனிங் புடவையில் சைனிங் அழகை காட்டும் பிரியாமணி!…

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top