Hai Jawani Toh Ishq Hona Hai: மீண்டும் உடைந்த பாலிவுட் கனவு: பூஜா ஹெக்டேவுக்கு அதிர்ச்சி கொடுத்த படம்

மிஷ்கின் இயக்கத்தில் முகமுடி படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூஜா ஹெக்டே. முதல் படம் படுதோல்வி அடையவே தனது பார்வையை தெலுங்கு
 
Hai Jawani Toh Ishq Hona Hai

மிஷ்கின் இயக்கத்தில் முகமுடி படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூஜா ஹெக்டே. முதல் படம் படுதோல்வி அடையவே தனது பார்வையை தெலுங்கு பக்கம் திருப்பினார். அப்க்கு அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அவ்ர் நடித்த படங்கள் வெற்றி பெறவே அதே புகழுடன் தமிழில் மீண்டும் வந்தார். இந்த முறை விஜயுடன் பீஸ், சூர்யாவுடன்  ரெட்ரோ , தற்போது ராகவ அலாரன்ஸுடன் ஒரு படம் என பிஸியானார். 

வழக்கமாக எல்ல நடிகைகளுக்கு வரும் ஆசை பூஜாவுக்கும் வந்தது. ஹவுஸ்புல் 4 தவைர மற்ற படங்கள் அனைத்து தோல்விலையே தழுவியது. இதையடுத்து Hai Jawani Toh Ishq Hona Hai படத்தினை பெரிதும் நம்பினார். 

Hai Jawani Toh Ishq Hona Hai

பிரபல இயக்குநர் டேவிட் தவான் இயக்கத்தில், வருண் தவான் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள திரைப்படம் ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை . டேவிட் தவானின் கமர்ஷியல் மற்றும் காமெடி பாணி படங்கள் எப்போதுமே பாலிவுட்டில் மினிமம் கேரண்டி வசூலைக் கொடுக்கும் என்பதால், இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று பூஜா ஹெக்டே கணக்கு போட்டிருந்தார். பாலிவுட்டில் தன்னை தக்க வைகக் இந்த படத்தில் கூடுதலாக கவ்ர்ச்சியாகவும் நடித்தார்.

இந்தப் படம் மட்டும் ஹிட் அடித்தால் பாலிவுட்டில் ஒரு ரவுண்ட் வரலாம், முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளைக் கைப்பற்றலாம்  என்று பூஜா ஹெக்டே மற்றும் அவரது தரப்பு பெரிதும் நம்பியிருந்தது. ஆனால், படம் வெளியான பிறகு வந்து கொண்டிருக்கும் நெகட்டிவ் விமர்சனங்கள் பூஜாவின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பிலும் மண்ணை அள்ளிப் போட்டுள்ளன.

Hai Jawani Toh Ishq Hona Hai

படம் பார்த்த முன்னணி சினிமா விமர்சகர்கள்,  இது 90-களின் அவுட்டேட்டட் கதை மற்றும் திரைக்கதை எனப் படத்தைவிமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி படத்தில் பூஜா ஹெக்டேவுக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவும், வெறும் கிளாமர் பொம்மையாக மட்டுமே அவர் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர்..

தென்னிந்தியாவில்  புட்ட பொம்மா  என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பூஜா ஹெக்டேவுக்கு, பாலிவுட் கனவு இந்த முறையும் பலிக்காமல் போனது அவரது ரசிகர்களிடையே  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From Around the web