பூனைக்குட்டி பூஜா ஹெக்டே!.. போட்டோவெல்லாம் வேறமாறி இருக்கேம்மா!.. மிருணாள் தாக்கூருடன் மல்லுக்கட்டு!
கோலிவுட் முதல் பாலிவுட் வரை முன்னணி நடிகையாக திகழும் பூஜா ஹெக்டெ, தனது திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சமூக வலைதள பதிவுகள் மூலமும் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட தத்துவார்த்தமான பதிவு மற்றும் புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் விஜய் உடன் இரண்டாவது முறையாக அவர் இணைந்துள்ளார். படத்தில் "கயல்" என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பதாக படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்தி திரையுலகில் Hai Jawani Toh Ishq Hona Hai திரைப்படத்தில் வருண் தவான் மற்றும் மிருணாள் தாகூர் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். நாளை அந்த படம் வெளியாகவுள்ள நிலையில், பூஜா ஹெக்டே வெளியிட்ட லேட்டஸ்ட் க்யூட் பிக்ஸ் வைரலாகி வருகிறது.
மேலும், துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் DQ41 திரைப்படத்திலும் பூஜா ஹெக்டே முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் காஞ்சனா4 உள்ளிட்ட சில பெரிய படங்களிலும் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இன்ஸ்டாவில் லேட்டஸ்ட்டாக பூஜா ஹெக்டே பகிர்ந்த பதிவில், "ஒரு பெண் தனது ஆன்மாவுடன் இணக்கமாக இருப்பது, பாயும் நதியைப் போன்றது. அவள் பாசாங்கு இல்லாமல் தான் விரும்பும் இடத்திற்குச் சென்று, தனது இலக்கை அடையும்போது தானாகவும், தானாக மட்டுமே இருக்கவும் தயாராகிறாள்" என்ற கருத்தை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு பல ரசிகர்களால் சுயநம்பிக்கை, சுதந்திரம் மற்றும் தனித்துவமான வாழ்க்கை நோக்கத்தை எடுத்துரைக்கும் வரிகளாக பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில், அவர் சமீபத்தில் ஃப்ராக் உடையில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அவரது ஃபேஷன் சென்ஸ் மற்றும் ஸ்க்ரீன் பிரசன்ஸ் குறித்து பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.
வருண் தவான் இந்தி படத்தில் பூஜா ஹெக்டே அதிக கிளாமர் காட்டப் போகிறாரா? மிருணாள் தாக்கூர் ஆதிக்கம் செலுத்துவாரா? என ரசிகர்கள் ஒரே ஆவலாக உள்ளனர்.
