ஒரு கப் ஹாட் சாக்லேட்!.. சிவகார்த்திகேயன், நெல்சனுடன் ஜாலியாக போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், பின்னர் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து பிரபலமானார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யுடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். இதன் மூலம் பூஜா ஹெக்டேவுக்கும் நெல்சனுக்கும் ஏற்கெனவே திரையுலகில் அறிமுகம் உள்ளது. தொடர்ந்து விஜய்யுடன் ஜன நாயகன் உள்ளிடட் சில படங்களில் நடித்தார்.
அதேபோல், நடிகர் சிவகார்த்திகேயனும் இயக்குநர் நெல்சனும் நீண்டகால நண்பர்கள். நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் , ரஜினிகாந்தின் ஜெயிலர் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநராக நெல்சன் உயர்ந்தார்.
நேற்று சென்னையில் நடைபெற்ற அனிருத் காவ்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அஜித், சிவகார்த்திகேயன், தோனி, நெல்சன், பூஜா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்கேற்றனர்,

இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் திலீப்குமாருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்தப் புகைப்படத்துடன் ஒரு கப் ஹாட் சாக்லேட்டும், நல்ல நண்பர்களின் துணையும்! என மகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார்.
