×

நேக்டு போட்டோ... அடாவடி ரசிகரின் கேள்விக்கு நடிகையின் ஸ்மார்ட் பதில்!

தமிழில் முகமூடி படத்தில் நடித்திருக்கும் பூஜா ஹெக்டே, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வருகிறார்.
 

அல்லு அர்ஜூனுடன் இவர் நடித்திருந்த `ஆலா வைகுந்தபுரம்லோ’ படம் இவருக்கு டோலிவுட்டில் பெரிய ரசிகர் கூட்டத்தைப் பெற்றுத் தந்தது. பிரபாஸுடன் நடித்திருக்கும் `ராதே ஷ்யாம்’ படத்தின் ரிலீஸுக்காகக் காத்திருக்கும் பூஜா ஹெக்டே, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே, சமீபத்தில் கேள்வி - பதில் செஷன் ஒன்றை நடத்தினார். அதில் ரசிகர்களின் பல்வேறு இன்ட்ரஸ்டிங்கான கேள்விகளுக்கு பூஜா பதிலளித்தார். 


ரசிகர்கள் பலர் நிறைய போட்டோக்களைப் பதிவிடுமாறு கேட்டிருந்தனர். அப்போது அடாவடி ரசிகர் ஒருவர் நேக்டு போட்டோ ஒன்றைப் பதிவிடுங்கள் என்று பூஜாவைச் சீண்டினார். அந்தக் கேள்விக்கு, `nange paon' என்று ஸ்மார்ட்டாகப் பதில் கொடுத்து அந்தக் கேள்வியைப் புறந்தள்ளினார் பூஜா ஹெக்டே. nange paon என்றால் `வெறும் கால்’ என்று பொருள். பூஜாவின் சமயோஜிதமான பதிலை நெட்டிசன்கள் கொண்டாடியும், அந்த அடாவடி ரசிகருக்குக் கண்டணங்களையும் தெரிவித்து வருகிறார்கள். 
 

From around the web

Trending Videos

Tamilnadu News