Connect with us

Gossips

டோட்டல் டேமேஜான வளர்த்தப் பிள்ளை நடிகரின் இமேஜ்!.. சரக்கு பார்ட்டி வைத்துக் கொண்டாடிய ஒல்லி நடிகர்?..

காமெடி ஹீரோவின் இமேஜை ஒரே நாளில் அந்த அவமானப்பட்ட மியூசிக் போட்டு நொறுக்கிய நிலையில், ஒல்லி நடிகர் சந்தோஷத்தில் சரக்கு பார்ட்டியையே வைத்து விட்டதாக கொளுத்திப் போட்டுள்ளனர்.

தனது வாழ்விலேயே மறக்க முடியாத சம்பவத்தை காமெடி நடிகர் செய்து தனக்கு வில்லனாக மாறி விட்டார் என மியூசிக் வெளிப்படையாக சொல்ல முடியாத விஷயங்களையும் கசியவிட்டு நடிகர் கொஞ்சம் கொஞ்சமாக கட்டி வைத்த கோலிவுட் கோட்டையையே தகர்த்து விட்டார்.

இதையும் படிங்க: மாஸ்டர் படத்தை போலவே லியோ படக் காட்சிகள் இணையத்தில் லீக்!.. அதிலும், அந்த ஹைனா சீனே வந்துடுச்சே!..

இதுவரை அந்த நடிகர் இந்த விவகாரத்தில் வாய் திறக்காமல் அமைதி காத்து வரும் நிலையில், பல கதைகள் கண்ணு, காது, வாய், மூக்கு எல்லாம் வைத்து கட்டப் பட்டு கோடம்பாக்கத்தில் டீ கடை முதல் டிபன் கடை வரை ஒரே பேச்சாக அனல் தெறிக்கிறது.

இனிமேல் அந்த காமெடி நடிகரை சக நடிகர்கள் கூட வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிட மாட்டார்கள் என ஏகப்பட்ட ஜோக்குகளும் மீம்களும் கூட உலா வருகின்றன. இந்நிலையில், தன்னுடைய தயவால் வளர்ந்து தனக்கே வேட்டு வைத்த காமெடி நடிகர் இமேஜ் தன்னை போலவே டேமேஜ் ஆகியிருப்பதை அறிந்து அந்த ஒல்லி நடிகர் தனது நண்பர்களுடன் சரக்கு பார்ட்டி வைத்து இந்த சந்தோஷத்தை கொண்டாடியதாக புதிய பஞ்சாயத்து ஒன்று சினிமா பிரபலங்கள் மத்தியில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: ப்ரேமம் நாயகிக்கு லியோ படத்தில் இந்த ரோல் தானா..? தளபதி என்ன தக்காளி தொக்கா..!

அனைத்துக்கும் ஆப்படிக்கும் விதமாக சீக்கிரமே நடிகர் வாய் திறந்து பேசினால் தான் பிரச்சனை தீரும் என்றும், அதை விட்டு விட்டு நடிகர் தனது அடுத்த படத்தின் புரமோஷனுக்காக இந்த மேட்டரை பயன்படுத்தினால் நல்லா இருக்காது என்றும் கூறுகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Gossips

To Top