Connect with us

Gossips

அந்த தியேட்டர் ஓனர் வாயை அடைக்க போன் போட்ட வி நடிகர்!.. தயாரிப்பாளருக்கு செம டோஸ்?..

யாராவது என்னத்தையாவது பேசிட்டு போறாங்க, உம்முன்னு கம்முன்னு கலெக்‌ஷனை எண்ணாம என்னடா பண்ணி வச்சிருக்க என படத்தின் தயாரிப்பாளருக்கு டோஸ் விட்ட வி நடிகர் இதுக்கு மேல அந்த தியேட்டர் ஓனர் மேலும், பல உண்மைகளை வெளியிடாமல் இருக்காமல் இருக்க அவருக்கும் போன் போட்டு மேட்டரை ஆஃப் செய்திருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் காத்துவாக்குல பரவி வருகின்றன.

வார நாட்களில் அடிவாங்கிய சிங்க படம் மீண்டும் சூடு பிடித்து விட்டதாகவும் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் படம் என ஒரு பக்கம் தியேட்டர் ஓனர்களை எல்லாம் உசுப்பி விட்டு போஸ்ட்டுகளாக போட வைத்து வெற்றி விழாவை கொண்டாட வி நடிகர் பக்கா பிளான் போட்டு பில்டப் செய்து வருகிறார்.

இதையும் படிங்க:  வாழ்வு தான்!.. கேபிஒய் பாலாவுக்கு ஊட்டிவிட்ட தளபதி 68 பட நடிகை!.. வெளியான சூப்பர் ஸ்டில்ஸ்!..

இந்நிலையில், மொத்தத்துக்கும் வேட்டு வைக்கும் விதமாக தன்னை தப்பா பேசிட்டார் அந்த தியேட்டர் ஓனர் என வரிந்துக் கட்டிக் கொண்டு அவரை தப்பா பேச, தயாரிப்பாளரின் பழைய கிரிமினல் ரெக்கார்டுகளையும் வெளியே எடுத்து விட்டு அப்ரூவராக மாறிவிட்டார் அந்த தியேட்டர் ஓனர்.

தயாரிப்பாளரை மட்டுமின்றி நடிகரின் முந்தைய படத்தின் ரிலீஸ் சமயத்தில் நடந்த பல தில்லாலங்கடி வேலைகளையும் கட்டவிழ்த்து விட்ட நிலையில், இன்னும் கொஞ்சம் போனால், மேலும் பல மோசமான லீலைகளும் அம்பலமாகிவிடுமே என்கிற பயத்தில் வி நடிகர் பயத்தில் பதறி அடித்துக் கொண்டு இந்த பிரச்சனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால், இதுவரை கட்டி காப்பாற்றி வந்த கொஞ்ச நஞ்ச பெயரும் சினிமா தொழிலும் பாதிக்கும் என்பதால், தயாரிப்பாளரை இந்த விவகாரத்தில் இதற்கு மேல் வாயை திறக்காமல் தன்னை போலவே கம்முன்னு இருக்கு சொல்லி விட்டார் என பேசிக் கொள்கின்றனர்.

இதையும் படிங்க: வடிவேலு தூக்கியெறிந்த காமெடி நடிகர்… சரியான அங்கீகாரத்தை கொடுத்து உதவிய மணிவண்ணன்…

author avatar
Saranya M
Continue Reading

More in Gossips

To Top