×

கொரோனா நிதி: நிர்வாண புகைப்படத்தை ஏலம் விடும் பிரபல நடிகை!

பிரபல அமெரிக்க நடிகை  ஜெனிஃபர் அனிஸ்டன் முழு நிர்வாணமாக தனது கை மற்றும் கால்களை மறைத்தபடி அமர்ந்திருக்கும் தன் புகைப்படத்தை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொரோனா நிதிக்காக வழங்குகிறார்.

 

இந்த புகைப்படம் 1995-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. புகைப்படக் கலைஞர் மார்க் செலிகரால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது உலகளவில் வைரலாகி வருகிறது.  51 வயதாகும் நடிகை ஜெனிஃபர் அனிஸ்டன் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.  

கொரோனா நோய் தொற்றினால் உலகம் முழுக்க ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதால் சாதாரண மக்கள் வாழ கூட வழியில்லாமல் தவித்து வருகின்றனர். இதனால் இருப்பவர்கள் இல்லாதவர்க்ளுக்கு உதவி வழங்கி வருகின்றனர். அந்தவகையில் நடிகை ஜெனிஃபர் அனிஸ்டனின் இந்த உதவி உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. தற்போது ஸ்டுடியோவில் போட்டோ உருவாகும் விதம் குறித்த  இந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News