×

என்னை படுக்கைக்கு அழைத்தார்.. ஷாக் கொடுத்த பிரபல நடிகரின் காதலி
 

பிரபல பாலிவுட் நடிகை தயாரிப்பாளர் என்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறி ஷாக் கொடுத்திருக்கிறார். 
 
என்னை படுக்கைக்கு அழைத்தார்.. ஷாக் கொடுத்த பிரபல நடிகரின் காதலி

பவித்ரா ரிஷ்டா சீரியல் மூலம் புகழ் பெற்றார் அங்கிதா லோகண்டே. இதில் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் ஜோடியாக நடித்தார். அதில் அவருக்கு கிடைத்த புகழ் பாலிவுட்டில் ஒரு இடத்தை பிடித்து கொடுத்தது. தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டில் மணிகர்னிகா: தி ராணி ஆஃப் ஜான்சி என்ற படத்தில் போராட்ட வீராங்கனை ஜல்கர் பாயாக நடித்தார். பாகி 3 படத்திலும் நடித்து புகழ் பெற்றார்.

முதல் சீரியல் நாயகனான சுஷாந்த் சிங் ராஜ்புட்டை காதலித்தார். தொடர்ந்து இருவரும் சில மனகசப்பால் பிரிந்தார். இருந்தும், சுஷாந்தின் இறப்புக்கு பின்னர் அங்கிதா அவருக்கு ஆதரவாக பல கருத்துக்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். 

இந்நிலையில், நான் என் சினிமா வாழ்க்கையில் இரண்டு முறை பாலியல் சீண்டலுக்கு ஆளாகினேன் எனத் தெரிவித்து இருக்கிறார். என் இளம் வயதில் ஒரு தயாரிப்பாளர் என்னை சமரசம் செய்ய கேட்டார். ஆனால் நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன். முகத்துக்கு நேரே இப்படி ஒரு கேள்வியை எதிர்கொண்ட தருணத்தை என்னால் மறக்க முடியாது. இரண்டாவது சம்பவம் சினிமாவில் நடிக்க துவங்கிய போது ஏற்பட்டது. என்னை படுக்கைக்கு அழைத்த அவர் ஒரு பெரிய நடிகர். அவர் பெயரை சொல்ல விரும்பவில்லை எனக் குறிப்பிட்டு இருக்கிறார். இது தற்போது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News