×

பிரபல நடிகை வீட்டில் நகை திருட்டு!

தமிழ், மலையாளம் என பல படங்களில் நடித்தவர் ஜெய பாரதி. சென்னை நுங்கம் பாக்கம் பகுதியில் வசித்து வரும் இவர் ரஜினி நடித்து முத்து, கமல் ஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜன் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
 

இந்நிலையில் அவரது வீட்டில் 31 சவரன் தங்க நகைகள் கடந்த வியாழக்கிழமை அன்று திருடு போனது. இது குறித்து அவர் அருகிலுள்ள போலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

சந்தேகமடைந்தது போலிசார் ஜெயபாரதியின் வீட்டில் காவலாளியாக வேலை செய்யும் நேபாளத்தை சேர்ந்த ஹாரக் பக்தூர் மற்றும் கார் டிரைவர் ஓட்டுனர் இப்ராகிம் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து நகைகளை 3 மணி நேரத்திற்குள் மீட்டுக்கொடுத்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News