×

பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் அதிர்ச்சி மரணம்...

பாலிவுட்டில் பல திரைப்படங்களிலும், வித்தியாசமான வேடங்களில் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இர்ஃபான் கான் மரணம். 
 

1988ல் சலாம் பாம்பே என்ற இந்தி படத்தில் இர்பான் கான் அறிமுகமானார். மேலும், தமிழ், ஹாலிவுட், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், பெருங்குடல் தொற்று காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே, கடந்த சில நாட்களாக அவர் மருத்துவரின் தீவிர கண்காணிப்பில் இருந்தார். 

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை மரணமடைந்தார்.  இவரின் மரணம் பாலிவுட் ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பாலிவுட் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News