Connect with us

Cinema News

கடைசி வரை கண்டுக்காத வடிவேலு!.. வீட்டிலேயே திடீரென சுருண்டு விழுந்து இறந்த போண்டா மணி

சிறுநீரகம் இரண்டுமே செயலிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த போண்டா மணி நேற்று இரவு வீட்டில் சுருண்டு விழுந்து இறந்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கடந்த ஒரு வருடமாக மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் என டயாலிஸிஸ் செய்ய அலைந்து வந்தார் காமெடி நடிகர் போண்டா மணி.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் தலா ஒரு லட்சம் கொடுத்து ஆரம்பத்தில் இவரது மருத்துவ செலவுக்கும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கும் உதவினர்.

இதையும் படிங்க: ஒரு நாளைக்கு ரெண்டு படம்னாலும் அடைக்கமுடியாதே! கௌதம் மேனனுக்கு இவ்வளவு கோடி கடனா?

மருத்துவமனையில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், வீட்டில் சிகிச்சை பெற்று வந்த போண்டா மணி நேற்று இரவு 10 மணியளவில் மயங்கி கீழே விழுந்திருக்கிறார். பதறிப் போய் மூச்சுப் பேச்சு இல்லாமல் கிடந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவர் இறந்து விட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

காமெடி நடிகர் போண்டா மணி பாக்கியராஜின் பவுனு பவுனு தான் படத்தின் மூலம் அறிமுகமானார். நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் துணை காமெடி நடிகராக நடித்து வந்த போண்டா மணிக்கு உதவி செய்வதாக வடிவேலு சொன்னாலும் ஒரு முறை கூட அவரை எட்டிக்கூட பார்க்கவில்லை. கடைசியாக தற்போது அவர் உயிரே பிரிந்து விட்டது. அவரது இறுதிச்சடங்கிற்காகவாவது வடிவேலு வருவாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: இந்த வருஷம் வெளியான 254 படத்துல இத்தனை படம் தான் தேறுச்சு!.. பிரபலம் சொன்ன பகீர் தகவல்!..

போண்டா மணி நலிவடைந்த சினிமா கலைஞராகவே கடைசி வரை வாழ்ந்து நோயால் போராடி வந்த நிலையில், நேற்று இதற்கு மேல் போராட முடியாது என நினைத்து விட்டாரோ என்னவோ தெரியவில்லை. அவரது மூச்சு நின்றுவிட்டது.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top