Connect with us

Cinema News

நீயெல்லாம் பிரியாணி தின்னத்தான் லாயக்கு! சூர்யாவை அசிங்கப்படுத்திய பிரபல இயக்குனர்

தமிழ் சினிமாவில் இன்று ஒவ்வொரு படத்திலும் தனக்கென வித்தியாசமான கதாபாத்திரங்களால் பலரையும் கவர்ந்து வருகிறார் நடிகர் சூர்யா. இவரின் சமீபத்திய படங்கள் எல்லாமே ஹிட் லிஸ்ட் என்பது எல்லாருக்குமே தெரிந்த சேதி தான்.

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் தான் சூர்யா. இவருக்கு என்னத்தான் திரை உலகம் புதிது இல்லை என்றாலும் வாய்ப்புகள் என்னமோ ஈசியாக கிடைக்கவில்லை. பல தடைகளை சந்தித்து தான் பெரிய இடத்தை சூர்யா பிடித்து இருக்கிறார். இவரின் முதல் படம் நடிகர் விஜயுடன் நடித்த நேருக்கு நேர். முதல் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் நடிக்க ஓகே சொல்லி இருக்கிறார். இப்படத்தை இயக்குனர் வசந்த் இயக்கி இருந்தார்.

அப்பொழுது சூட்டிங்கில் ஒரு காட்சியில் சூர்யாவால் சரியாக நடிக்க முடியாமல் இருந்ததாம். ஏகப்பட்ட டேக்குகள் சென்றுக் கொண்டு இருந்தது. உடனே இயக்குனர் படப்பிடிப்புக்கு ப்ரேக் கொடுத்து அனைவரையும் சாப்பிட செல்லுமாறு கூறிவிட்டார்.

இதை தொடர்ந்து, சாப்பிட சென்ற சூர்யா அங்கு பிரியாணி பரிமாறப்பட்டு இருந்துள்ளது. நன்றாக சாப்பிட்டவர், இயக்குனரிடம் சென்று சார் பிரியாணி நல்லா இருக்கு போய் சாப்பிடுமாறு கூறி இருக்கிறார். அதில் கடுப்பான வசந்த் நீயெல்லாம் பிரியாணி சாப்பிடத்தான் லாயக்கு, உனக்கு நடிப்பெல்லாம் சரி வராது எனக் கூறிவிட்டாராம்.

படப்பிடிப்பில் அனைவரும் இருக்கும் இப்படி ஒரு வார்த்தையை கேட்ட சூர்யாவிற்கு இது பெரிய அவமானமாக தோன்றிவிட்டதாம். அதனால் தீவிரமாக உழைத்து அந்தப் படத்தை முடித்துக் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், வசந்த் கூறி அந்த வார்த்தை மட்டுமே சூர்யாவின் முதலும் கடைசியுமான அவமானம் எனக் கூறப்படுகிறது.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top