கார்த்தி - மோகன் ராஜா படத்துக்கு இசை இவரா?

 
Karthi mohan raja

தொடர்ந்து தனது சகோதரர் ரவி மோகனை வைத்து 'ஜெயம், உனக்கும் எனக்கும், தனி ஒருவன்' என பல படங்கள் பண்ணவர் இயக்குநர் மோகன் ராஜா. 

இவர் இயக்கப்போகும் புதிய படத்தில் கார்த்தி தான் ஹீரோவாக நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளார்.

இதனை 'பிரின்ஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

Hiphop tamizha

ஷூட்டிங்கை இந்த ஆண்டின் இறுதியில் துவங்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். தற்போது, இப்படத்திற்கு இசையமைக்க ஹிப்ஹாப் தமிழா கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆல்ரெடி மோகன் ராஜாவின் 'தனி ஒருவன்' படத்துக்கு இவர் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

From Around the web