Dare Devil-ல் அஜித்துடன் இணையப்போகிறாரா முன்னணி தெலுங்கு ஹீரோ?
Aug 10, 2026, 13:54 IST
பல மாதங்களாக 'AK 64' அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்கு சமீபத்தில் 'டேர் டெவில்' என்ற டைட்டிலையும் சேர்த்து அறிவித்தார் அஜித்குமார். மேலும், இந்த படத்தை அஜித்தின் மனைவி ஷாலினியே தயாரிக்கப்போவதாக டைட்டில் லுக் போஸ்டரில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப்போகிறார். 'குட் பேட் அக்லி'-யில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக இது இருக்குமாம்.
இதன் ஷூட்டிங்கை வருகிற செப்டம்பர் மாதத்தில் தான் ஆரம்பிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். ஆல்ரெடி இதில் மலையாள நடிகர் மோகன்லாலும் நடிக்க ஒப்பந்தமாகி விட்டார்.

தற்போது, இதில் முக்கிய ரோலில் நடிக்க முன்னணி தெலுங்கு ஹீரோ ஒருவர் கமிட் ஆகி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அது வேறு யாருமில்லை நம்ம வெங்கடேஷ் தான்.