ponniyin selvan
கடந்தாண்டு மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான படம் தான் பொன்னியின் செல்வன் திரைப்படம். கல்கி எழுதிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை படமாக எடுக்க எம்ஜிஆர் காலத்தில் இருந்தே பல பேர் போராடிக் கொண்டிருந்தனர்.
ponniyin selvan
எத்தனை எத்தனை கதாபாத்திரங்கள், விதவிதமான அங்கங்கள் என காட்சிகளுக்கு காட்சிகள் பின்னிப் பிணைந்து அந்த நாவலில் கல்கி புகுந்து விளையாண்டிருப்பார். அப்பேற்பட்ட ஒரு காவியத்தை படமாக எடுக்க யாருக்கு தைரியம் இருக்கிறது என்று பல இலக்கியவாதிகளின் பேச்சும் அடிப்பட்டுக் கொண்டிருந்தது.
இதையும் படிங்க: நெப்போலியன் நினைச்சிருந்தா நடிச்சிருக்க முடியும்!.. பொன்னியின் செல்வனில் ஏன் வாய்ப்பு பறிபோனது?.. அதுவும் எந்த ரோல் தெரியுமா?..
எம்ஜிஆர், சிவாஜி, கமல் என பல பேர் முயற்சித்தும் முடியாததை மணிரத்னம் 20ஆண்டுகளாக போராடி ஒரு வழியாக தன் ரசனையோடு படமாக கொடுத்தார். இப்படி வெள்ளித்திரையில் கொண்டு வருவதற்கே இவ்ளோ போராட்டங்களை சந்தித்த தமிழ் சினிமா சின்னத்திரையில் ஒளிபரப்ப எத்தனை இன்னல்களை சந்திக்க நேரிடும்.
kamalhasan
ஆனால் அந்த சம்பவமும் நடந்திருக்கிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பாகவே விஜய் டிவியும் சன் டிவியும் தங்கள் சேனல்களில் பொன்னியின் செல்வன் நாவலை சீரியலாக எடுக்கத் திட்டமிட்டிருக்கின்றனர். அந்த இரு சேனலும் தனித்தனியாக ஒரே நேரத்தில் சீரியலாக எடுக்க திட்டமிட்டிருக்கின்றனர்.
அதற்கான பூஜைகளும் தனித்தனியாக ஒரே நேரத்தில் போட்டிருக்கின்றனர். அதற்கு பூஜை போட்டதே நடிகர் கமல்ஹாசன் தானாம். ஆனால் ஏதோ ஒரு வித காரணத்தால் அந்த திட்டம் அப்படியே நின்று விட்டதாம். இது நடந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஆகிவிட்டதாம். இந்த தகவலை நடிகர் நெப்போலியன் ஒரு பேட்டியில் கூறினார்.
Kantara 2…
நடிகர் தனுஷ்…
Kantara Chapter…
காந்தாரா சேப்டர்…
Manikandan: எந்த…