×

ஆபாச வீடியோ போடுவேன்... புடிக்கலனா நீ விவாகரத்து வாங்கிக்கோ!.. இப்படி ஒரு மனைவியா?

டிக்டாக்கில் வீடியோ போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த கணவனை, மனைவி விவாகரத்து செய்த சம்பவம் நடந்துள்ளது.
 

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கிஷோர், மாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 6 வயதில் ஒரு மகனும் இருக்கிறான். 3 தற்போது கிஷோர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். எனவே, மனைவி மற்றும் மகனை தனது பெற்றோர் பராமரிப்பில் விட்டு சென்றார்.

இந்நிலையில், 3 வருடங்களுகு முன்பு மாலினி டிக்டாக் வீடியோவில் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, அவர் பல வீடியோக்களை பதிவிட அவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பின்பற்ற துவங்கினர். எனவே, அவர்களை தக்க வைத்துக்கொள்ள சற்று கவர்ச்சியான உடை அணிந்தும், பாடல்களுக்கு ஆபாசமான நடனத்தையும் ஆடி வீடியோவை அவர் வெளியிட்டார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கிஷோர் இப்படி வீடியோ போட வேண்டாம் என மாலினியிடம் சண்டை போட்டுள்ளார்.

ஆனால், தனக்கும் கிடைக்கும் லைக் மற்றும் கமெண்டுகள் பெரிதாக தெரிந்த ஷாலினி ஒரு லட்சம் பேர் பின்பற்றும் என் டிக் டாக் வீடியோ கணக்கை டெலிட் செய்ய முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டார். அதோடு, கிஷோரை விவாகரத்து செய்யவும் முடிவெடுத்து நீதிமன்றத்தை நாடியுள்ளார். தற்போது அவர்கள் இருவருக்கும் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News