Categories: Cinema News latest news

230 அடி உயர பிரம்மாண்ட கட் அவுட்!.. பிரபாஸ் பிறந்தநாளை தெறிக்கவிட்ட டோலிவுட் ரசிகர்கள்!..

பாகுபலி படம் மூலம் உலகளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ் இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு தற்போதே தெலுங்கு ரசிகர்கள் பிரம்மாண்ட கட் அவுட் ஒன்றை வைத்து நேற்று அதற்கு பாலாபிஷேகம் எல்லாம் செய்து கொண்டாடிய காட்சிகள் வைரலாகி வருகின்றன.

சென்னையில் 1979ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி பிறந்த டார்லிங் பிரபாஸ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். மகேஷ் பாபுவே 80 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வரும் நிலையில், ராஜமெளலி ஹீரோவான பிரபாஸ் பான் இந்தியா நடிகராக வளர்ந்த நிலையில் 100 கோடி சம்பளம் வாங்கும் தெலுங்கு நடிகராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஹாலிவுட் தரத்தில் விடாமுயற்சி!.. அடுத்த ஹைப்பை ஆரம்பிச்சிட்டானுங்க.. விவேகம் 2 மாதிரி வராமா இருந்தா சரி!..

சுமார் 230 அடி உயர சலார் படத்தின் கட் அவுட்டை வைத்த தெலுங்கு ரசிகர்கள் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பிரபாஸின் பிறந்தநாளை ஏராளமான ரசிகர்கள் அந்த கட் அவுட்டுக்கு முன் கூடி கொண்டாடி தீர்த்துள்ளனர்.

 

பாகுபலி 2 படத்துக்கு பிறகு பிரபாஸ் நடித்த சாஹோ, ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ் என 3 படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவினாலும் சலார் கண்டிப்பாக ஹிட் கொடுக்கும் என்கிற நம்பிக்கையில் பிரபாஸை இந்தளவுக்கு அவரது ரசிகர்கள் கொண்டாடி வருவதை பார்த்து மற்ற நடிகர்களின் ரசிகர்களும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் படிங்க: ‘லியோ’வில் விஜய் தூக்கிவைத்திருந்த குழந்தை இந்த நடிகையின் மகனா? தோழியை மறக்காத தளபதி

இந்த ஆண்டு டிசம்பர் 22ம் தேதி சலார் திரைப்படம் ஷாருக்கானின் டன்கி படத்துடன் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Saranya M
Published by
Saranya M