6 மொழிகளில் பிரபாஸ் - 'சீதா ராமம்' இயக்குநர் கூட்டணியில் உருவாகும் 'FAUZI'... ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!
'தி ராஜாசாப்' படத்துக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் 'Fauzi', 'Spirit', 'கல்கி 2898 AD பார்ட் 2' என அடுத்தடுத்து மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் 'Fauzi' படத்தை 'சீதா ராமம்' புகழ் இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக இமன்வி நடிக்கிறார்.
மேலும், முக்கிய வேடங்களில் மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், ஜெயப்பிரதா ஆகியோர் நடிக்கிறார்கள். இதற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்து வருகிறார்.
अज्ञातपर्व ENDS.
— Fauzi (@FauziTheMovie) July 16, 2026
THE REBELLION BEGINS 🔥#Fauzi GRAND RELEASE WORLDWIDE ON 3rd DECEMBER 2026 ❤️🔥#FauziOnDec3
Rebel Star #Prabhas#Imanvi @hanurpudi #MithunChakraborty #JayaPrada @AnupamPKher @Composer_Vishal @sudeepdop @kk_lyricist @MrSheetalsharma @rckamalakannan… pic.twitter.com/IUQaZLPb2Y
தற்போது, இப்படத்தை இந்த ஆண்டு (2026) டிசம்பர் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, பெங்காலி, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஆறு மொழிகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.
