தன்னை வளர்த்த இயக்குனர் மகனுக்கு உதவிய பாகுபலி பிரபலம்... நெகிழும் சினி உலகம்

ஷோபன் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து கடந்த 2004ம் ஆண்டு வெளியான படம் `வர்ஷம்’. மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த இந்தப் படமே பிரபாஸை ஒரு நடிகராக நிலை நிறுத்தியது. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஷோபன் கடந்த 2008ம் ஆண்டு திடீரென உயிரிழந்தார். இவரது மகன் சந்தோஷ் ஷோபன், பேப்பர் பாய் மற்றும் தானு நேனு உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும், நடிகராக வளர சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்தசூழலில், சந்தோஷ் ஷோபன் தற்போது யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் ரொமாண்டிக் டிராமா ஜானர் படமொன்றில் நடித்து வருகிறார். யூவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை பிரபாஸ், தன்வசம் வைத்திருப்பது டோலிவுட் உலகம் அறிந்த செய்தி. தன்னை வளர்த்துவிட்ட இயக்குனரின் மகன் கஷ்டப்படுவதை அறிந்து அவருக்கு சரியான நேரத்தில் உதவ பிரபாஸ் முன்வந்திருக்கிறார். இது டோலிவுட்டை நெகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது. கோலிவுட் ஹீரோயின் பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்துக்கு புரமோஷன் வேலைகளைச் செய்யவும் பிரபாஸ் ரெடியாக இருக்கிறார் என்கிறார்கள்.