பில்டப் கொடுத்த அளவுக்கு பிரபாஸ் படம் இருக்குதா?.. கல்கி ட்விட்டர் விமர்சனம் எப்படி இருக்கு?

 
பில்டப் கொடுத்த அளவுக்கு பிரபாஸ் படம் இருக்குதா?.. கல்கி ட்விட்டர் விமர்சனம் எப்படி இருக்கு?
பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸுக்கு இன்னொரு பாகுபலியாக கல்கி 2898 ஏடி திரைப்படம் அமையும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு திரையரங்கில் மிகப்பெரிய ட்ரீட் காத்திருக்கிறது என காளை முதலில் தெலுங்கு ரசிகர்கள் கல்கி படத்தை கொண்டாடி வருகின்றனர். மிகப்பெரிய கட்டவுட் களை வைத்து பிரம்மாண்ட மாலைகளை பிரபாஸ் கட்டவுட்டுக்கு போட்டு டிஜே மியூசிக் எல்லாம் வைத்து பொறி பறக்க கல்கி படத்தின் FDFS கொண்டாட்டத்தை அரங்கேற்றி வருகின்றனர். இதையும் படிங்க:  ‘வி.ஐ.பி-2’வில் முதலில் நடிக்கவிருந்தது இந்த ‘குக் வித் கோமாளி’ பிரபலமா?.. அவமானப்பட்டு வந்ததுதான் மிச்சம் தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடித்த வெளியான மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் ஐந்து ஆண்டு காலம் செதுக்கி எடுத்துள்ள கல்கி திரைப்படம் இன்று காலை 4:00 மணிக்கு உலகம் முழுவதும் வெளியானது. சிறப்பு காட்சியை பார்த்த ரசிகர்கள் படத்தின் முதல் பாதி ரொம்பவே ஸ்லோவாக செல்வதாகவும் நடிகர் பிரபாஸ் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வருகிறார் என்றும் ட்விட்டர் விமர்சனத்தில் கூறிவிட்டனர். இடைவேளைக்கு பிறகு சூடு பிடிக்கும் படம் இரண்டாம் பாதியில் விஸ்வரூபம் எடுப்பதாக விமர்சகர்கள் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். பில்டப் கொடுத்த அளவுக்கு பிரபாஸ் படம் இருக்குதா?.. கல்கி ட்விட்டர் விமர்சனம் எப்படி இருக்கு? இதையும் படிங்க:  வெறியேத்துறதே உனக்கு வேலையா போச்சி!. சைனிங் உடம்பை காட்டி இழுக்கும் கீர்த்தி ஷெட்டி… பிரபாஸுக்கு நிச்சயம் இந்த படம் சலார் படத்தை தொடர்ந்து அடுத்த பிளாக்பஸ்டர் என பிரபாஸ் ரசிகர்கள் சோசியல் மீடியா முழுவதும் கல்கி படத்தை கொண்டாடி வருகின்றனர். கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பு மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கிறது என்றும் ஹாலிவுட் லெவல் சண்டை காட்சிகள் படத்திற்கு பெரிய பலம் என்றும் சில சர்ப்ரைஸ் கேமியோக்கள் நிச்சயம் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் என்றும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. டோலிவுட்டில் இந்த படத்துக்கு இருக்கும் கொண்டாட்டம் ஓவர்சீஸில் உள்ள தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் காணப்படுகிறது. ஆனால், இந்த படத்துக்கு இந்தியாவின் மற்ற இடங்களில் இதுவரை பெரிதாக எந்தவொரு கொண்டாட்டமும் இல்லை. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்குத்தான் படம் வெளியாகிறது. இதையும் படிங்க:  சிவாஜி படத்தை ரீமேக் செய்து கையை சுட்டுக்கொண்ட துயரம்… அட தயாரிப்பாளர் அந்த நடிகரா?..

From Around the web