Connect with us

Cinema News

பாகுபலி நடிகருக்கு கல்யாணமாம்… அட யாருங்க பொண்ணு… ஆச்சரியத்தில் வைரலாக்கும் ரசிகர்கள்…

Bahubali:  இந்திய சினிமாவிற்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்த திரைப்படம் தான் பாகுபலி. இப்படத்தின் ஹீரோ பிரபாஸுக்கு இந்த படத்தை தவிர மற்ற எந்த படங்களும் கை கொடுக்காதது தான் வேதனையே. தற்போது பிரபாஸ் தன்னுடைய இன்ஸ்டா கணக்கில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்த திரைப்படம் தான் பாகுபலி. தென்னிந்திய மொழியில் இரண்டு பாகங்களாக வெளியான பாகுபலி மிகப் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இந்திய சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தையே பிடித்தது.

இதையும் படிங்க: சிவாஜி எந்த இயக்குனரின் காலில் விழுந்து வணங்கினார் தெரியுமா? பராசக்தி நாடகத்துல நடிச்ச ஹீரோயின் இவரா..?!

ஆனால் இப்படம் கொடுத்த வெற்றி நடிகர் பிரபாஸுக்கு பெரிய அளவில் உதவி செய்யவில்லை. அதன் பின் அவர் நடிப்பில் வெளியான எல்லா திரைப்படங்களும் மிகப்பெரிய அளவில் தோல்வியை தான் தழுவியது. கேஜிஎப் திரைப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீர் இயக்கத்தில் சலார் திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.

அப்படமும் அவருக்கு தோல்வி படகமாகவே அமைந்தது. தற்போது சலார் படத்தின் இரண்டாம் பாகத்திலும், நாகஸ்வினி இயக்கத்தில் கல்கி ஏடி 2898 திரைப்படத்திலும், கண்ணப்பா என்ற தெலுங்கு படத்திலும் நடித்த வருகிறார். இந்நிலையில் பிரபாஸ் இன்று தன்னுடைய இன்ஸ்டா கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.

இதையும் படிங்க: டேஷா போச்சு… சுசித்ராவால் அசிங்கப்படும் கார்த்திக்… இரண்டாம் மனைவி போட்ட வைரல் பதிவு!…

ஏற்கனவே பிரபாஸும் நடிகை அனுஷ்காவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இருந்தும் இருவரும் அந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்காமலே இருந்தனர். தற்போது  44 வயதாகும் பிரபாஸ் தன்னுடைய கல்யாண சேதியை சொல்வாரா மாட்டாரா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

Continue Reading

More in Cinema News

To Top