×

தேடி வந்த 150கோடி.. வேண்டாம் என ஒதுக்கி தள்ளிய பிரபாஸ்

கடந்த ஓராண்டில் மட்டும் ரூ. 150 கோடிக்கான விளம்பர படங்களில் நடிக்க மறுத்துவிட்டார் பிரபாஸ். 
 
prabhas_23

கடந்த ஓராண்டில் தன்னை தேடி வந்த ரூ. 150 கோடிக்கான விளம்பர படங்களில் நடிக்க மறுத்திருக்கிறார் பிரபாஸ்.

பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸின் மார்க்கெட் மாறிவிட்டது. அவர் நாடு முழுவதும் பிரபலமாகிவிட்டார். அவரின் படங்களை பார்க்க அனைத்து மொழி ரசிகர்களும் ஆவலாக இருக்கிறார்கள். 
இதை உணர்ந்து கொண்ட பல்வேறு நிறுவனங்கள் பிரபாஸை தங்கள் விளம்பர படங்களில் நடிக்க வைக்க விரும்பின, விரும்புகின்றன. இதையடுத்து தங்களின் பிராண்ட் அம்பாசிடர் ஆகுமாறு பிரபாஸிடம் கேட்டிருக்கின்றன.

காலணிகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், சோப்பு என்று ஏகப்பட்ட விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பு பிரபாஸை தேடி வந்திருக்கிறது. இவை அனைத்தும் கடந்த ஓராண்டில் வந்த வாய்ப்புகள் ஆகும். ஆனால் அவரோ, எனக்கு பணம் முக்கியம் இல்லை என்று கூறி அந்த விளம்பர படங்களில் நடிக்க மறுத்துவிட்டார். அவர் நடிக்க மறுத்ததற்கு முக்கிய காரணம் இருக்கிறது.

விளம்பரங்கள் குறித்து தெலுங்கு திரையுலகை சேர்ந்த ஒருவர் கூறியதாவது, பிரபாஸ் மிகவும் பிரபலமானவர். இந்தியாவில் மட்டும் அல்ல வெளிநாடுகளிலும் அவர் பிரபலம். அதனால் அவரை விளம்பர படத்தில் நடிக்க வைத்தால் ரீச் அதிகம் இருக்கும். கடந்த ஓராண்டில் மட்டும் ரூ. 150 கோடிக்கான விளம்பர படங்களில் நடிக்க மறுத்துவிட்டார் பிரபாஸ். 

விளம்பரம் செய்யக் கூடாது என்பதற்காக அந்த வாய்ப்புகளை அவர் ஏற்காமல் இல்லை. அவர் முன்பும் கூட விளம்பர படங்களில் நடித்திருக்கிறார், இனியும் நடிப்பார். ஆனால் தான் எத்தகைய பொருட்களை விளம்பரம் செய்கிறோம் என்பதில் அவர் மிகவும் கவனமாக இருக்கிறார். அவர் தன் பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறார். அதனால் தான் தன்னை தேடி வரும் விளம்பர படங்களில் எல்லாம் அவர் நடிப்பது இல்லை என்றார்.

From around the web

Trending Videos

Tamilnadu News