விஜய்யை திடீரென தனது மாமனாருடன் சென்று சந்தித்த அஜித் பட இயக்குநர்!..
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி 2 ஆண்டுகளில் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ள விஜய்யை வாழ்த்துவதற்காக பல்வேறு நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சந்தித்து வரும் நிலையில், தற்போது இளைய திலகம் பிரபு தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பில் பிரபுவுடன் அவரது மகனும் நடிகருமான விக்ரம் பிரபு மற்றும் மருமகனும் பிரபல இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த அவர்கள், சில நிமிடங்கள் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்களை நேரில் சந்திக்க அரசியல் பிரமுகர்கள் மட்டுமின்றி திரைத்துறை பிரபலங்களும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வரும் நிலையில் இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த புகைப்படங்களை விஜய் ரசிகர்கள் மற்றும் திரையுலக ரசிகர்கள் பெருமளவில் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், இந்த சந்திப்பில் ஆதிக் ரவிச்சந்திரனின் வருகை கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது. சமீபகாலமாக குட் பேட் அக்லி போன்ற வெற்றிப் படங்களை இயக்கி வரும் ஆதிக், தொடர்ந்து அஜித் குமார் நடிப்பில் புதிய படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து திரைத்துறை பிரபலங்கள் சந்தித்து வரும் நிலையில், பிரபு குடும்பத்தின் இந்த மரியாதை சந்திப்பும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசியல் மற்றும் திரையுலகம் இணைந்த இந்த அரிய தருணத்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.
