Categories: Cinema News latest news

அஜித்துக்காக கதை கேட்ட பிரபு தேவா.. கண்டிப்பாக அவரே உங்களுக்கு கால் பண்ணுவார்..

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக, நடிகராக, இயக்குனராக பன்முகம் கொண்டவர் பிரபுதேவா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிரபலமான இயக்குனராக உள்ளார்.

தற்போது இயக்கத்திற்கு சற்று பிரேக் விட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் பல்வேறு திரைப்படங்கள் தயாராகி உள்ளன. அப்படி அவர் நடிப்பதற்கு ஒரு இயக்குனர் கதையை கொண்டு வந்துள்ளார்.

அந்த கதையை கேட்டு நடிகர் பிரபுதேவா அசந்து விட்டாராம். மேலும், காட்சிகள் மற்றும் வசனங்கள் அனைத்தும் நன்றாக இருந்தது. ஆனால், அது தனக்கு செட் ஆகாது என அந்த இயக்குனரிடம் கூறிவிட்டாராம். மேலும், இந்தக் காட்சிகள் மற்றும் வசனம் நிச்சயம் அஜித்திற்கு பொருத்தமாக  இருக்கும். அதனால் அவரிடம் சென்று சொல்லுங்கள் என்று கூறிவிட்டாராம்,.

இதையும் படியுங்களேன் –  கடுப்பான சூர்யா.. 25 லட்சம் டோட்டல் குளோஸ்.. பாலா செஞ்ச காரியத்தை பாருங்க…

உடனே, அந்த இயக்குனர், ‘ உங்களை சந்தித்து கதை கூறுவதே எனக்கு பெரிய திண்டாட்டம் ஆகிவிட்டது. இதில் அஜித்தை எப்படி நான் சந்தித்து அதை கூறுவது.’ என்று பயந்துள்ளார்.

உடனே பிரபுதேவா சினிமாவில் எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம். இந்த கதை யார் மூலமாகவோ அஜீத்தின் காதுகளுக்கு செல்லலாம். அவரே உங்களுக்கு போன் செய்யலாம். ஆதலால் நம்பிக்கையோடு காத்திருங்கள் என்று நம்பிக்கை வார்த்தைகள் உதித்து விட்டு வந்துள்ளார்பிரபுதேவா.

Manikandan
Published by
Manikandan